மெதுவா ஓட்ட சொன்னது ஒரு குத்தமா ?? கடுப்பான Taxi Driver !!!

வேகத்தை குறைக்க சொன்னதற்காக பாதி வழியில் பயணியை இறக்கிவிட்ட Taxi டிரைவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காவிலுள்ள நாஷ்விள்ளே என்ற நகரில் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆரோன் ஸ்வீட்லண்ட் என்பவர் ஒரு Taxi-ஐ book செய்துள்ளார். நெடுஞ்சாலையில் அந்த டாக்ஸி டிரைவர் அளவுக்கு அதிகமான வேகத்தில் காரை இயக்கியுள்ளார்.

டாக்ஸி டிரைவரிடம் சற்று பொறுமையாக செல்லுங்கள் என ஸ்வீட்லண்ட் கூறவே ஓட்டுனர் பயங்கரமாக கோபப்பட்டு உள்ளார். கடுப்பான அந்த ஓட்டுநர் ஸ்வீட்லண்ட்டை காரை விட்டு உடனே கீழே இறங்கச் சொல்லி காரை நிறுத்தினார்.
பயணியை இறங்கச் சொன்னது மட்டுமின்றி தானே காரில் இருந்து இறங்கி வந்து காரின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த பயணியின் பொருட்களையும் நடுரோட்டில் வீசிவிட்டு அவரை திட்டி கொண்டே தனது காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார். இந்த சம்பவத்தை தனது மொபைல் கேமராவில் பதிவு செய்து ஸ்வீட்லண்ட் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவானது நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த டாக்ஸி டிரைவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
அந்த டாக்ஸி டிரைவர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது ஒருவருக்கு நல்லது சொல்வது தான் தவறோ என்ற சந்தேகம் நம்முள் ஏற்படுகிறது. கோபம் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்பதை மேலுள்ள இந்த வீடியோ நமக்கு எடுத்துரைக்கிறது.
அளவுக்கு மீறிய கோபம் என்றுமே ஆபத்தானது தான்.
இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.