• July 27, 2024

எனக்கு நீ தான் வேணும் !!! – அடம்பிடித்த பூனை !!!

 எனக்கு நீ தான் வேணும் !!! – அடம்பிடித்த பூனை !!!

சமீபகாலங்களில் சமூக வலைதளங்களில் செல்லப் பிராணிகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பூனை ஒன்று தனது உரிமையாளரை தேர்ந்தெடுக்கும் அழகிய வீடியோ நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

பகிரப்படும் இந்த வீடியோவில் ஒரு நபரிடம் அந்த பூனை ஓடிவந்து தாவி கொஞ்சுகிறது. “உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது”, என அந்த பூனையை மீண்டும் அந்தக் கூண்டுக்குள் அந்த நபர் அனுப்பி வைக்கவே மீண்டும் மீண்டும் அந்த நபரிடம் பூனை ஓடிவந்து கொஞ்சி கட்டித் தழுவியது.

Do Cats Have Feelings? Do Cats Feel Love? | Petfinder

இந்த வீடியோவை வெளியிட்ட Heaven On Earth எனும் NGO, “இது தான் பூனைகள் மனிதர்களை தத்தெடுக்கும் முறை”, என இந்த பதிவிற்கு Caption கொடுத்துள்ளனர். இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அந்தப் பூனை காட்டிய அன்பிற்கு வேறு எதுவும் ஈடாகாது என நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பல்லாயிரக்கணக்கானோர் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

அழகிய Cat தனது உரிமையாளரை தேர்ந்தெடுக்கும் அன்பான காட்சியை கீழுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.