• November 8, 2024

அட இது பனிப்பாறையா படகா ???????? அசத்திய கலைஞர் !!!

 அட இது பனிப்பாறையா படகா ???????? அசத்திய கலைஞர் !!!

பார்ப்பதற்கு பனிப்பாறை போல் தோன்றும் அரிய வகை படகு ஒன்றை உருவாக்கி உலகையே வியக்க வைத்துள்ளார் ஜூலியன் பெத்தியர் எனும் கலைஞர். இந்த படகின் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது.

பாரீசை சேர்ந்த பிரபல கலைஞர் ஜூலியன் பெத்தியர் பாலிதீன் மற்றும் எபோக்சி பிசின் போன்ற ரசாயன பொருட்களை வைத்து அச்சு அசல் பனிப்பாறை போலவே காட்சியளிக்கும் இந்த அபூர்வ படகை உருவாக்கியுள்ளார். தூரத்திலிருந்து இதைப் பார்ப்பவர்கள் இதை ஒரு பனிப்பாறை என்று தான் நிச்சயம் நினைத்துக் கொள்வார்கள்.

பணி பாறைக்கும் ஜூலியன் உருவாக்கியுள்ள இந்த படத்திற்கும் எந்த ஒரு வித்தியாசத்தையும் சாதாரண கண்களை கொண்டு நம்மால் கண்டறிய முடியாது. இந்தப் படகு ஒரு மோட்டார் படகு என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படகிற்கு INVISIBLE 2021 என ஜூலியன் பெயர் வைத்துள்ளார். ஆங்கிலத்தில் INVISIBLE என்றால் பார்க்க முடியாதது என்று பொருள். வருங்காலத்தில் கடற்படையினருக்கு இதுபோன்ற படகுகள் பெரிய அளவில் உதவும் என நெட்டிசன்கள் இந்தப் படகை குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனது தனித்துவமான கலை அறிவைக்கொண்டு இது போன்ற ஒரு படகை உருவாக்கியதற்கு ஜூலியன் பெத்தியர் அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பனிப்பாறை படகின் வீடியோவை கீழே காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.