• June 15, 2024

என்னது… வேத காலத்திலேயே விமானங்களா? – வியத்தகு தொழில்நுட்பம்..!

 என்னது… வேத காலத்திலேயே விமானங்களா? – வியத்தகு தொழில்நுட்பம்..!

Vimana

விமானத்தை ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விபரம் நமக்கு நன்றாக தெரியும். ஆனால் இந்த ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே நமது வேத காலத்திலும், இதிகாச காலத்திலும் இதுபோன்ற விமானங்கள் பயன்பாட்டில் இருந்தது என்று சொன்னால் அது உங்களுக்கு மேலும் வியப்பை ஏற்படுத்தும்.


 

அது மட்டுமல்லாமல் இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்களுக்குள் எழுவது இயற்கை தான். ஆனால் உண்மையில் இதுபோன்ற விமானங்கள் அன்றைய மன்னர்களாலும், கடவுள்களாலும் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் மட்டும் அல்லாமல் அவற்றை வடிவமைத்த விதங்கள் பற்றிய தரவுகளும் உள்ளது.


 

எனவே நமது முன்னோர்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய விமானங்கள் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். வேதத்தில் மிகப் பழமையான ரிக் வேதத்தில் விமானங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கான குறிப்புகள் உள்ளது. மேலும் இவை காற்றில் அதிக தூரம் பயணிக்க கூடிய திறன் மிக்கதாக இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த விமானங்களில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

 

கண்டம் விட்டு கண்டம் செல்லக்கூடிய ஏவுகணைகளை நாம் கண்டுபிடித்திருந்தாலும், அன்றே ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்திற்கு பயணிக்க கூடிய திறன்மிக்க விமானங்கள் இருந்துள்ளது.


Vimana
Vimana

பண்டைய நூல்களில் இது குறித்த விளக்கங்கள் மிகச் சிறப்பான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மையமாகக் கொண்டுதான் மனிதர்கள் விமானத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்று கூட கூறலாம். எனினும் இதற்கான அறிவியல் ஆதாரம் நம்மிடையே இல்லை.

 

அப்படி விஞ்ஞான ஆதாரம் இல்லாத போதிலும் நம் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு பல்வகையான விமானங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் சப்த ரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ மகரிஷி எழுதிய “யந்திர சர்வஸ்வம்” என்ற நூலில் விமானங்களை தயாரிக்க கூடிய முறைகளைப் பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.


 

அதுபோலவே அகத்திய மகரிஷியின் “சக்தி சூக்தம்” எனும் நூல், ஈஸ்வரர் என்பவர் “கௌதாமணி காலா” என்ற நூலிலும்,ஷக்கானந்தரின் “வாயு தத்துவ பிரகரணம்”, நாரதரின் “வைஸ்வநாத தந்திரம்” மற்றும் ஆகாச தந்திரம், யானபிந்து சேதாயன போன்ற நூல்கள் அனைத்துமே ஆதிகால விமானங்களும் அதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளது.


 

விமான பற்றிய விவரங்களை மட்டுமல்லாமல் விமானத்தை ஓட்டக்கூடிய விமானிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பாரத்வாஜ மகரிஷி இரண்டு அத்தியாயங்களில் மிக விரிவாக விளக்கி இருக்கிறார்.

 


இந்த விமானி, விமான சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் 32 கொள்கைகளை கற்று தேர்ந்தெடுப்பதோடு மட்டுமல்லாமல், இயந்திரங்களின் நுட்பங்களை அறிந்தவனாகவும், வான வீதியில் விமானத்தை செலுத்தக்கூடியவனாகவும், நிலை நிறுத்துவதற்கு முன்பும், பின்பும், மேலும், கீழும் வட்டமாகவும், தலைகீழாகவும் விமானத்தை ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் எந்த நிமிடத்திலும் மரணத்தை எதிர் நோக்கும் சக்தியை கொண்டவனாகவும், அச்சத்தை அறியாதவனாகவும் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

 


ரிஷிகள் குறிப்பிட்டும் பல்வேறு வகையான விமானங்கள்

Vimana
Vimana

1.சக்தி யுகம் 

 இந்த விமானத்தின் சிறப்பு அம்சமே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறக்கக்கூடிய திறனை படைத்திருக்கும். எனவே தான் இந்த விமானத்தை சக்தி யுகம் என்ற பெயரில் அழைத்து இருக்கிறார்கள்.


2.பூத வாஹா

 இந்த விமானத்தை முன்னும் பின்னும் சம வேகத்தில் இயக்கக்கூடிய தன்மை கொண்டிருப்பதால் தான் இந்த விமானத்தை பூதவாஹா என்று  அழைத்துள்ளார்கள்.

3.தூமாயனா

 

இந்த விமானம் ஆனது, எரிபொருளை தானே புதிதான முறையில் உற்பத்தி செய்யக்கூடிய தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது எரிக்கப்பட்ட எரிபொருளிலேயே, மீண்டும் எரிபொருளாக மாற்றக்கூடிய திறன் படைத்தது. இதற்கு உதாரணமாக நாம் பிளாஸ்டிக்கை ரீ சைக்கிளிங் செய்கிறோம் அல்லவா அதை கூறலாம்.


 

4.கிதோகமா


 


சிகி,சிரிக்கி போன்ற மரங்களை எரித்து அதிலிருந்து பெறப்பட்ட எண்ணையை எடுத்து விமானத்தில் பயன்படுத்துவார்கள். இது இன்று இருக்கும் பயோ டீசலுக்கு முன்னோடியாக இருந்தது என்று கூறலாம்.

 

5.ஹம் சுவாகா


 

இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் எப்படி சோலார் பேனர்களை பயன்படுத்தி சூரிய சக்தியின் மூலம் பல செயல்களை செய்கிறோமோ, அது போலவே சேமித்து வைக்கப்பட்ட சூரிய சக்தியின் மூலம் அபாரமாக இயங்கக்கூடிய திறன் படைத்தது தான் இந்த ஹம் சுவாகா விமானம்.

 

6.தாரமுஹா

 


விண்ணிலிருந்து பூமியை நோக்கி வரக்கூடிய எரிகல்களையே எரிபொருளாக மாற்றி இயங்கக்கூடிய விமானம்தான் இந்த தாரமுஹா என்ற பழமையான விமானம்.

 

7.மாணிவஹா


 

பூமிக்கு அடியில் இருக்கக்கூடிய சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் விஜய, பாத்ரா,அஷ்ஹா போன்ற உலோகப் பொருட்களைக் கொண்டும் செயற்கையான உப்புக்களால் செலுத்தப்படக்கூடிய விமானம்.

 


8.மாராதசாஹா

 

இந்த விமானத்தை பொறுத்தவரை வானத்தில் இருந்தபடியே காற்றை உறிஞ்சி, அந்த காற்றை மின்சார சக்தியாக மாற்றி இயங்கக்கூடிய தன்மை கொண்டது.

Vimana
Vimana

இது போன்ற எட்டு வகையான விமானங்களைப் பற்றி தெள்ளத் தெளிவாக பாரத்வாஜர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் விமானம் என்றால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு காற்று வழியாக பறந்து செல்லக்கூடிய கருவி தான், விமானம் என்பதை மிகத் தெளிவாக உணர்த்தி இருப்பதோடு இதில் 32 சூட்சுமங்கள் பயன்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.


 

அதுமட்டுமல்ல நண்பர்களே வைமானிகா சாஸ்திரத்தில் விமானத்தை ஓட்டி செல்வதை பதிவு செய்யக்கூடிய கருவி இருந்திருப்பதாகவும், விமானத்தில் இருந்தே எதிரிகளை தாக்கி அடிக்கக்கூடிய ஏவுகணைகள், விஷ வாயுக்கள் போன்றவை பற்றிய குறிப்புகள் உள்ளது. மேலும் விமானத்தில் இருக்கக்கூடிய இறக்கைகளை நீட்டவும், மடக்கி வைக்கவும் அன்றே தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


 

விமானத்தை ஓட்டி செல்ல வேண்டிய நபர் அணிய வேண்டிய உடை, உணவு பழக்க வழக்கம், விமானத்தில் பயன்படுத்தப்படும் உலோகம் பற்றி எல்லாம் விரிவான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். மேலும் விமானத்தை செய்யும் போது வெப்பத்தை அதிகளவு கிரகித்துக் கொள்ளக்கூடிய உலோகத்தால் செய்வதுதான் நல்லது என்பதை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

 


இன்றைய தொழில்நுட்பத்திற்கே சவால் விடக்கூடிய வகையில் விமானத்தில் ஏழு வகையான கண்ணாடி வில்லைகளை பொருத்த வேண்டும். அந்த வில்லைகள் ஆயுதங்களை பயன்படுத்தும் போது உதவிகரமாக இருக்கும் என்று அந்த சாஸ்திர நூல் எடுத்துக் கூறியுள்ளது.

Vimana
Vimana

அது மட்டுமா.. எதிரி விமானியின் கண்களை இருட்டாக்க லென்ஸ்களை பயன்படுத்த வேண்டும். அது சூரிய ஒளியில் மின்சக்தியைப் பெற்று அதன் மூலம் எதிரியின் விமானங்களை அழிக்கக்கூடிய முறைகளை மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் சோலார் பயன்பாடு அன்றே உள்ளது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

 


என்ன ஒரு வியக்கத்தக்க தொழில்நுட்பத்தை அன்றே நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நினைக்க உங்களுக்கு தோன்றும். உண்மையில் விமானங்களில் ஏழு மோட்டார்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில் சூரிய சக்தி, ரசாயன சக்தி, மின்சக்தி போன்றவற்றை இவர்கள் பயன்படுத்தி விமானங்களை இயக்கியுள்ளதை படிக்கும் போது மேலும் வியப்பு ஏற்படுகிறது.

 

இன்று நிலவுக்கு நாம் விரைவில் செல்ல இருக்கிறோம். அதற்கு சந்திரன் மூன்று நமக்கு உதவி செய்யும் என்ற பெரும் மிதப்பில் இருக்கக்கூடிய நாம், அன்றே ருத்ம விமானம், சுந்தர விமானம் போன்றவற்றை சந்திர மண்டலத்திற்கு செலுத்தியதும் அந்த விமானங்கள் அப்பல்லோ விண்கலத்தை போன்ற அமைப்புடன் ஒத்து இருப்பதை பார்க்கும்போது எல்லை இல்லாத ஆச்சரியம் ஏற்படும்.

 


அது மட்டுமா நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய திரிபுர விமானம், இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு சவால் விடக்கூடிய சகுன விமானம், இவையெல்லாம் கற்பனை அல்ல அன்று உருவானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Vimana
Vimana

தீஷமபதி என்ற பெயரில் இருந்த கருவியானது எதிரிகளின் விமானத்தை கவனித்து அதன் வருகையை முன்கூட்டியே கணிக்க சத்பிதா என்ற அமைப்பை விமானத்தில் பொருத்தி இருப்பார்களாம். மேலும் அபஸ்மாராதாபம் என்ற ஆயுதப் பகுதிக்கு இது தகவலை அனுப்பும் உடனே அந்த அபஸ்மாரா கருவி ஷர்ஷன் என்ற ஏவுகணையை 87 டிகிரி வெப்பத்தில் வெளியிட்டு எதிரி விமானங்களை அழித்துவிடும் என்ற சுவாரசியமான விஷயத்தை “திக்பிர தர்ஷண ரகசியம்” என்ற நூல் மிகவும் சிறப்பான வகையில் எடுத்துக் கூறுகிறது.

 


மேலும் சங்க இலக்கிய நூல்களான புறநானூறு மணிமேகலை சீவக சிந்தாமணி போன்றவற்றில் வான ஊர்தி பற்றிய கருத்துக்கள் காணப்படுகிறது. அது மட்டுமா? பழம் தமிழ் காவியத்தில் வானம் ஊர்தி வடிவமும் அதை இயக்கும் விதம் பற்றி பாடல்கள்  பாடப்பட்டுள்ளது.

 

சீவக சிந்தாமணியில் வரும் மயில் பொறியின் என்ற செய்தியானது மயில் போன்ற ஒரு பொருள் பறக்கும் என்ற வியப்பை ஏற்படுத்தியில் உள்ளது‌.

Vimana
Vimana

மேலும் அந்தப் பொரியினை வலஞ்சுழி மற்றும் இடம் சுழியாக திருகுவதின் மூலம் வான மேகங்களிடையே பறக்கவோ, காண்பவர் மயிர் சிலிர்க்கும் வகையில் தரையில் இறங்க முடியும் என சீவக சிந்தாமணி விளக்கிறது.

 

இது போலவே ராமாயணத்தில் செலுத்தப்பட்ட “புஷ்பக விமானம்” இவையெல்லாம் ஏன் உண்மையாக இருக்கக் கூடாது என நமக்கு என்ன தோன்றுகிறது.

 

இவ்வாறு பழங்கால விமான  பற்றிய பல அற்புதமான நூல் ஆதாரங்கள் நமக்கு கிடைத்திருந்த போதிலும் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட விமானங்களோ, இன்று ஒன்று கூட நமக்கு கிடைக்கவில்லை என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படக்கூடும்.

 

உண்மையில் இந்த கருவிகள் ஏதேனும் ஒரு இயற்கை சீற்றத்தால் அழிந்திருக்கலாம் அல்லது அதை உருவாக்கியவர்களே அழித்தும் இருக்கலாம்.எனவே பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, எப்போது வேதங்கள் உருவானதோ அன்றே விமானங்கள் பற்றிய விஷயங்களை நம் மூதாதையர்கள் தெள்ளத் தெளிவாக உருவாக்கி பயன்படுத்தி இருக்கிறார்கள். 

Vimana
Vimana

எனவே வேதங்களும் இதிகாசங்களும் வெறும் கட்டுக்கதையாக இருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் அவை நிகழ்ந்திருக்கலாம். அது நிமித்தமாக இன்றும் நடந்துவரும் ஆய்வில் பலவிதமான உண்மைகள் இன்று வெளிவந்துள்ளது. உதாரணமாக ராமாயணத்தில் கட்டப்பட்ட ராமசேதுபாலம், மகாபாரதத்தில் மிகப்பெரிய பங்கு ஆற்றிய கண்ணன் ஆண்ட துவாரகை இன்றும் குஜராத்தில் அருகில் இருக்கக்கூடிய பகுதியில் அதுவும் கடலில் உள்ளது, போன்ற உண்மைகள் அறிவியல் பூர்வமாக நமக்கு வெளிவரும் வேளையில் கட்டாயம் நாம் அவற்றை நம்பக்கூடிய காலகட்டங்களில் பயணம் செய்கிறோம் என்பது உங்களுக்குப் தெள்ளத் தெளிவாக விளங்கலாம்.

 

அந்த வரிசையில் விண்வெளியில் அளப்பரிய சாதனைகளை செய்திருப்பதோடு, பல்வகையான விமானங்களை உருவாக்கி அதில் பயணம் செய்த நம் முன்னோர்களின் அறிவை இந்த இடத்தில் நாம் பாராட்டி தான் ஆக வேண்டும். எனவே நாம் நமக்கு கிடைத்திருக்கும் நூல்களை பயன்படுத்தி அவற்றின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொண்டு வந்து சேர்க்கலாம்.

 

அதை விடுத்து நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக் கொண்டு தற்போது அது போன்ற கண்டுபிடிப்புகளை வெளிநாட்டு மக்கள் செய்து வருவதை நீங்கள் பாராட்டுவது தவறில்லை. என்றாலும் நமது பழம் பெருமை உணர்ந்து நீங்களும் அவற்றை சாதிக்க முயற்சி மேற்கொள்வது அவசியம்.