Gorilla-க்களையும் விட்டு வைக்காத கொரோனா !!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் மனித இனத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மனிதர்கள் மட்டுமின்றி உலகெங்கிலுமுள்ள விலங்குகளும் ஆங்காங்கே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அட்லாண்டாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் வசித்து வரும் 13 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக கொரில்லாக்கள் ஜலதோஷத்தாலும் இருமலாலும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தது. சந்தேகத்தின் பெயரில் இந்த குரங்குகளுக்கு கால்நடை மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனையின் முடிவில் 13 Gorilla குரங்குகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. விலங்கியல் பூங்காவில் வேலை செய்யும் மனிதர்களிடமிருந்து இந்த தொற்று குரங்குகளுக்கு பரவியிருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்களிடமிருந்து மனிதர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு கம்மியென வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள குரங்குகளில் ஒரு குரங்குக்கு 60 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லாண்டா விலங்கியல் பூங்காவில் இந்த குரங்குகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றில் இருந்த மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
- “சிறுவயதிலேயே மலட்டுத்தன்மை..!” – காரணம் லேப்டாப்..
- தன்னம்பிக்கையை தூண்டிவிடும் விவேகானந்தர்..!” – அற்புத வரிகள்.. ஒருமுறை படியுங்கள்..
- ஒன்றல்ல… மூன்று ஔவையார் இருந்தார்களா? – யார் இந்த ஔவை பாட்டி..
- பூனைகள் சதுர பெட்டியை விரும்பக் காரணம் என்ன? – ஆராய்ச்சியில் வெளி வந்த தகவல்..
- உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்து கோயில்கள்..! – ஆச்சரியம் ஏற்படுத்தும் உண்மைகள்..
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.