• July 27, 2024

அமைதியான நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு கிடைத்த இடம் என்ன? – ஏதாவது முன்னேற்றம் உள்ளதா?

 அமைதியான நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு கிடைத்த இடம் என்ன? – ஏதாவது முன்னேற்றம் உள்ளதா?

GPI

உலகிலேயே மிக அமைதியான நாடு என்றால் எல்லோருக்கும் நினைவு வருவது ஐஸ்லாந்து தான். மேலும் 2023 உலகளாவிய நாடுகளில் அமைதியான நாடு என்ன என்பதை ஜி பி ஐ சமீபத்தில் கணக்கெடுப்பினை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் அமைதியான நாடுகளின் தர வரிசையை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையானது இன்ஸ்டியூட் ஆப் எக்கனாமிக்ஸ் அண்ட் பீஸ் மூலம் வெளிவந்தது.

ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம் மதிப்பு மட்டுமல்லாமல் அங்கு நிலவும் சமூக அமைதி பற்றி இந்த தரவு ஆய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிடுகிறது. மேலும் ஜி பி ஐ உலக மக்கள் தொகையில் 99.7 மக்கள் தொகையை உள்ளடக்கியது மட்டுமல்லாமல் 163 நாடுகளை உள்ளடக்கியது.

GPI
GPI

இந்த ஆய்வு அந்த நாட்டின் சமூக பாதுகாப்பு மட்டுமல்லாமல், அங்கு நடக்கும் உள்நாட்டுப் போர், சர்வதேச மோதல், ராணுவ மையங்கள் போன்றவை அனைத்தும் ஆய்வு செய்யப்படும்.

அந்த வரிசையில் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த சர்வேயின் படி ஐஸ்லாந்து தான் உலகில் மிக அமைதியான நாடு என்ற அந்தஸ்தை ஐஸ்லாந்து பிடித்துள்ளதாக ஜி ஐ பி தரவுகள் கூறுகிறது.

இதனை அடுத்து அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருகிறது. அமைதி குறைவான நாடுகளில் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து எட்டாவது இடம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து காங்கோ, சிரியா, ஏமன், தெற்கு சூடான் போன்ற நாடுகள் வருகிறது.

அது சரி நம் நாடு எந்த வரிசையில் இருக்கிறது என்று நீங்கள் ஏக்கத்தோடு காத்திருப்பது தெரிகிறது. இந்தியா தரவரிசையில் 126 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இது மூன்று புள்ளி ஐந்து சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளதாக அந்த தரவுகள் கூறுகிறது.

GPI
GPI

மேலும் 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எல்லை தாண்டிய சண்டைகள், அத்து மீறல்கள் தற்போது குறைந்ததின் காரணத்தால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக ஜிபிஐ தனது கருத்தை தெரிவித்துள்ளது.

இதை அடுத்து இனி வரும் ஆண்டுகளில் இந்தியா இந்த தரவில் முன்னேறிச் செல்லுமா? அல்லது பின் தங்குமா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.