• July 27, 2024

Twitter ரோட சோலிய முடிக்க வந்துடுச்சு Threads ஆப்..! – தமிழ் எழுத்தான “கு” குறியீட்டுடன் மச்சி..!

 Twitter ரோட சோலிய முடிக்க வந்துடுச்சு Threads ஆப்..! – தமிழ் எழுத்தான “கு” குறியீட்டுடன் மச்சி..!

threads app

தற்போது பேஸ்புக் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் ஜுக்கர் பெர்க் செய்துள்ள காரியத்தை பார்க்கும் போது வந்துட்டேன்னு சொல்லு உன்ன ஓங்கி அடிக்க வந்துட்டேன்னு சொல்லு என்று எலான் மஸ்க்கு சவால் விடக்கூடிய வகையில் மிகச் சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார்.

இந்த சம்பவத்தால் வயிற்றில் புளியை கரைத்தது போல அவருக்கு நிச்சயம் இருக்கும். இதற்குக் காரணம் ட்விட்டரை தூக்கி விழுங்கக் கூடிய வகையில் மெட்டாவின் புதிய தளமான த்ரெட்ஸ் ஆப் அறிமுகமாகியுள்ளது தான்.

நீ இதுதான் ஆள் ரவுண்டர் என்று சொல்லக்கூடிய வகையில் படு வேகமாக உலகமெங்கிலும் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆப் அறிமுகமான இரண்டு மணி நேரத்திலேயே threads app இரண்டு மில்லியனுக்கும் மேலானோர் இதில் இணைந்து விட்டார்கள்.

threads app
threads app

இந்த அற்புதமான ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டுக்கும் ஏற்ப கிடைக்கிறது. இது ட்விட்டரை விட எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு நீங்களே அந்த ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்தி பார்த்தால் நிச்சயம் ரிசல்ட் கிடைக்கும்.

இதற்காக இந்த ஆப்பை டவுன்லோடு செய்ய நீங்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே இன்ஸ்டாகிராம் ஐடி இருந்தால் அந்த ஐடியை பயன்படுத்தி நீங்கள் லாகின் செய்து கொள்ள முடியும். ஒரு வேளை நீங்கள் இன்ஸ்டால் பக்கத்தை லாக் செய்து வைத்திருந்தால் இந்த புதிய த்ரெட்ஸ் ஆப் பெர்மிஷன் கேட்கும். அதைக் கொடுத்து விட்டாலே போதும் நீங்கள் புதிதாக சைன் இன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை.

அது சரி அப்படி என்ன புதிய விஷயங்கள் இந்த ஆப்பில் இருக்கிறது என்று நீங்கள் எண்ணுவது தெரிகிறது. அதற்கான விடை என்னவெனில் எந்த ஆப்பை நீங்கள் பயன்படுத்தி 500 எழுத்துக்கள் வரை உள்ள போஸ்டர்களை கூட பதிவிட முடியும். மேலும் இதன் இணைப்புகளில் அதிகபட்சம் பத்து படங்கள் வரை நீங்கள் சேர்க்க முடியும். அது மட்டுமல்லாமல் 5 நிமிடங்கள் நீளமாக இருக்கக்கூடிய வீடியோக்களையும் பகிரலாம்.

threads app
threads app

மேலும் நீங்கள் போடும் போஸ்ட்க்கு யார் பதில் அளிக்கலாம் என்பதையும் நீங்கள் கட்டுப்பாடோடு வைத்துக் கொள்ளலாம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 3 புள்ளி மெனுவை கிளிக் செய்வதின் மூலம் ஃபாலோ, பிளாக், ரிப்போர்ட் போன்றவை கொடுக்கப்பட்டு இருக்கும்.

இது மட்டுமல்லாமல் நீங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் செய்த அக்கவுண்டுகள் அனைத்தும் இந்த ஆப்பில் தானாகவே பிளாக் செய்யப்பட்ட நிலையில் தான் இருக்கும்.

மேலும் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே ஆலன் மாஸ்க் அதிரடியாக சில திட்டங்களை கொண்டு வந்ததோடு மாதாந்திர சந்தா, ப்ளூடிக் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது பயனாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வேறு ஏதேனும் புதிய ஆப் கிடைக்காத என்று நினைத்திருந்தவர்களுக்கு இந்த ஆப் வரப்பிரசாதமாக மாறிவிட்டது என்று கூறலாம்.