• December 4, 2024

விஞ்ஞானம் வளராத காலத்திலேயே விண்வெளி கருத்துக்களை வெளியிட்ட தமிழனின் விண்வெளி அறிவு…

 விஞ்ஞானம் வளராத காலத்திலேயே விண்வெளி கருத்துக்களை வெளியிட்ட தமிழனின் விண்வெளி அறிவு…

space

கலிலியோ தொலைநோக்கியை கண்டுபிடிக்கும் முன்பே விண்ணில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு பெயரிட்டு கோவிலில் சிலையாக வடித்தவன் தமிழன். அது மட்டுமல்லாமல் அந்த நட்சத்திரங்களின் காலத்தை கணக்கிட்டு மனிதனின் தலை எழுத்தை ஜோதிடத்தின் மூலம் நிர்ணயித்தவன் தமிழன்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை வளப்பெரும்… காட்சி என்று மாணிக்க வாசகர் பாடிய பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாடல் வரிகளை தொடர்ந்து வரும் பாடல் வரிகளையும் நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் சூரிய கதிரொளியில் சுழலும் தூசி போலத்தான் இந்த பேரண்டம் உள்ளது என்பதை மிகத் தெளிவாக விளக்கி இருப்பார்கள்.

space
space

மேலும் பட்டினப்பாலை என்ற நூலில் உருதிரங்கண்ணனார் நாண்மீன் விரைய கோள் மீன் போல என்ற பாடலை பாடியிருப்பார். இதில் தலாமீ என்று சொல் சூரியனைச் சுற்றி கோள்கள் வலம் வருகிறது என்பதை அன்றே கண்டுபிடித்தவன்.

புறநானூறில் புலவர் பாடும் புகழுடையார் விசும்பின் வலவன் ஏவா வானூர்தி என்ற பாடலில் ஏவா வானூர்தி என்ற சொல்லை கூறியிருப்பார். இந்த சொல் ஆளில்லாத விமானத்தை பற்றியதாகும். எனவே இந்த பாடல் வரிகளை நன்கு ஆராய்ந்து பார்த்தால் தமிழர் நம் வானவியல் அறிவு எத்தகையது என்பது அனைவருக்கும் எளிதாக புரியும்.

அது மட்டுமா புறநானூற்றுப் புலவன் நிலவும் கதிரும் சந்திக்கும் வேளை ஒன்றுக்கொன்று வழி விட்டு இருந்ததை உவமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். அந்த பாடல் வரிகள் இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர் புண்கண் மாலை மறைந்தாங்கு என்பதாகும்.

space
space

உலகம் உருண்டை என்பதை அறிந்ததே பதினாறாம் நூற்றாண்டில் தான். ஆனால் அதற்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் உலகம் உருண்டை என்பதை திருவாசகப் பாடல்களின் மூலம் மிகத் தெளிவாக உணர்த்தி இருக்கிறார்கள். அந்த பாடல் வரிகள் அண்டப் பகுதியில் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி… பாடல் வரிகளில் உலகம் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்றும் இவை விரிந்து கொண்டே செல்கிறது என்றும் மாணிக்கவாசகர் கூறியிருக்கிறார்.

அது மட்டுமா? தற்போது பாரதியார் பார்ப்போம் வானை அளப்போம், கடல் மீனை அழைப்போம் சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் என்று பாடிய பாடல்கள் இன்று உலக அளவில் உண்மையாகி வருகிறதே. இது அவர்களது கற்பனை பாடலா அல்லது விண்வெளியில் அவர்களுக்கு இருந்த அகண்ட அறிவா என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.