இமயமலை பள்ளத்தாக்கில் இருக்கும் எலும்பு கூடு ஏரி..! – மறைந்திருக்கும் மர்மம் என்ன?
இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த சமயத்தில் இமயமலையில் பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு பகுதியில் ஒரு ஏரியை ஹரிகிருஷ்ணன் மதுவால் என்ற வனத்துறை ரேஞ்சர் கண்டுபிடித்தார்.
மேலும் இந்த ஏரியானது 4800 மீட்டர் உயரத்தில் இருந்து. இதில் பனிக் கட்டிகள் நிறைந்து இருந்தது போலவே அந்த ஏரி முழுவதும் மனித எலும்புக்கூடுகள் அதிக அளவு காணப்பட்டது.
இதனால் தான் எந்த ஏரிக்கு “எலும்புக்கூடு ஏரி” என்ற பெயர் ஏற்பட்டதோடு “ரூப்குந்த் ஏரி” என்றும் அழைத்தனர். எப்படி இவ்வளவு எலும்புக்கூடுகள் வந்தது என்று பலரும் பல விதத்தில் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.
ஒரு சமயம் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்திய நிலப்பரப்புக்குள் ஊடுருவ முயன்ற ஜப்பானியர் ராணுவ வீரர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்று சில கருத்துக்களை தெரிவித்த போதும் அந்த எலும்புக்கூடுகளை பரிசோதனை செய்து பார்த்தபோது அது 500 ஆண்டுகளுக்கு முந்தையது என தெரிய வந்ததால் அது ஜப்பானிய ராணுவ வீரர்கள் அல்ல என்பது உறுதியானது.
மேலும் அந்த எலும்புக்கூடுகள் பற்றி பல வகையான கதைகள் நிலவுகிறது. ஒரு சிலர் இந்த மலை தொடர் வழியாக சென்ற ராணுவ வீரர்கள் உடைய உடல்களாக கூட இருக்கலாம் என்றும் மேலும் நோய் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
வேறு சிலரோ கடுமையான பணி புயலில் சிக்கி கூட்டத்தோடு சிலர் இறந்திருக்கலாம் என்று சொல்லி வரும் வேளையில் உள்ளூர் கிராமப்புற பாடல் இந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் மலைக்கடவுளான நந்தா தேவியை காணச் சென்றவர்களை, தேவி எச்சரித்தும் பேச்சைக் கேட்காமல் சென்றவர்களுடையது என்று கூறுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மலையில் இருந்து அதிக கனமுடைய இரும்பு போன்ற பொருளை உருட்டி விட்டதாலே இவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.
ஆய்வின் முடிவிலும் அங்கு இருக்கக்கூடிய எலும்புக்கூடுகள் உறுதியான ஒரு உருண்டையான பொருள் மோதி தான் இறந்து இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
மேலும் இந்த ஆய்வில் 23 பேர் தற்கால இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் பதினாறு பேர் கிழக்கு மத்திய தரைக் கடைகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலம் வரும் போதும் பனிக்கட்டியால் உறைந்திருந்த ஏரி உருகியதின் மூலம் எலும்புக்கூடுகள் வெளியே தெரிய அதனை ரேஞ்சர் கண்டுபிடித்திருக்கிறார்.
1 Comment
Superb sir❤️
Comments are closed.