• October 12, 2024

 “யார் இந்த பரஞ்சோதி மகான்?” –  மனதை அள்ளும் வியப்பான பொன்மொழிகள்..

  “யார் இந்த பரஞ்சோதி மகான்?” –  மனதை அள்ளும் வியப்பான பொன்மொழிகள்..

Paranjothi Mahan

தத்துவ ஞானியான பரஞ்சோதி மகான் இந்தியாவின் தென் பகுதியில் உள்ள கன்சாபுரம் என்ற ஊரில் 1900 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவர் தனது இளமை காலத்திலேயே பர்மா சென்றதின் காரணத்தால் தனது தாய் மொழியைப் போல பர்மா மொழியை பேசவும், எழுதவும் பழகிக்கொண்டார்.

இதை அடுத்து பர்மாவில் இவர் இருக்கும் போது ரங்கூன் புதுக்கன் ரோட்டின் அருகில் உள்ள பழைய குதிரை மையத்தில் 1938 ஆம் ஆண்டு உபதேசம் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1939 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வந்தார்.

Paranjothi Mahan
Paranjothi Mahan

இதனை அடுத்து இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளிலும் இவர்களுக்கு சீடர்கள் உருவானார்கள். குறிப்பாக இவர் ஒவ்வொரு நாடுகளிலும், நகரங்களிலும் சபைகளை ஏற்படுத்தி குண்டலினி உபதேசத்தை சிறப்பாக வழங்கி வந்தார்.

ஞானம் என்பதே விஞ்ஞானம் தான் என்று முழங்கி வந்த இவரை ஞானவள்ளல், தத்துவத்தவன் ஞானி, ஜகத் மஹா குரு என்று சீடர்கள் அன்போடு அழைத்தார்கள். இதனை அடுத்து பல பொன்மொழிகளை கூறி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் கூறிய பொன்மொழிகளில் சில முக்காலமும் நிலைத்து நின்று மனிதர்களுக்கு உயர்ந்த ஞானத்தை கொடுக்க வல்லவர்கள் இருக்கும். மேலும் அவர்களை ஊக்கப்படுத்தி நன்னெறி படுத்தக் கூடியவையாக உள்ளது என கூறலாம்.

Paranjothi Mahan
Paranjothi Mahan

ஈசனே மனிதனாகிறான். மனிதன் ஆன ஈசனே தன் உயர்ந்த ஞானத்தால் தன்னை அறிவான் என்ற அற்புத வரிகளை தந்த இவர் புகழை நம்பி அறிவை அடிமைப்படுத்தாதீர்கள். இதன் மூலம் துன்பம் ஏற்படும். எனினும் துன்பத்திற்கு அன்றி உண்மையை விட்டு விடக் கூடாது என்பதை தெளிவாகக் கூறியிருக்கிறார்.

பெற்றவரும் தாய் அல்ல, பாலூட்டியவளும் தாய் அல்ல, வளர்த்தவழும் தாய் அல்ல, அறிவை யார் அறிய வைக்கிறார்களோ அவர்களே தாய் என்று கூறியதோடு நாவில் ஒரு சிறு நோய் இருந்தால் ருசி அறியாது, போல பிறர் மேல் வேறுபாடு இருந்தாலும் அது சிறந்த நிலையை ஏற்படுத்தாது என்று கூறியிருக்கிறார்.

Paranjothi Mahan
Paranjothi Mahan

ஒருவர் வாழ்க்கையில் இடையூறு இன்னல்களை  அனுபவமாக கருதி இன்பமாக ஏற்றுக் கொள்கிறார்களோ, அவன் வரும் எதிர்காலத்தில் உலகில் கோடிக்கணக்கான இன்னல்களை தீர்க்கக் கூடிய வலிமை மிக்கவனாக பிரகாசிப்பான் என்ற கருத்தை கூறியதோடு மயக்கம் தெரியாதவர்கள் பக்தர்கள் யோகிகள், சித்தர்கள் என்பதையும் பகிர்ந்து இருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனின் எண்ணம், செயல், சொல் சீராக இருக்க வேண்டும். கனியை போன்றது ஆத்மா, வாசனையை போன்றது அன்பு, அழகை போன்றது அருள், சுவையைப் போன்றது அறிவு என விளக்கமாகக் கூறியிருக்கும் இவர் இல்லறம் இல்லாத துறவறம் இல்லை. துறவறம் இல்லாத இல்லறம் இல்லை என்று விளக்கி இருக்கிறார்.

 உடலை நடத்துவது ஞாபகம் உடலில் உணர்வு அறிவது உடலாய் இருப்பது நினைப்பு என்ற தத்துவங்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய தத்துவ ஞானி தான் இவர்.