என்னது… வட இந்தியர்கள் ஐரோப்பியர்களோடு ஒத்து போகிறார்களா? – மரபியல் ஆய்வில் தெரியும் உண்மை என்ன?
கிமு 6000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி நாகரிகம் பற்றி அறிந்திருக்கும். நாம் அந்த சிந்து சமவெளி நாகரிகத்தை தான் பழமையான நாகரீகம் என்று இன்று வரை கூறி வருகிறோம். மேலும் இந்த சிந்து சமவெளி நாகரிகத்தில் லிங்க வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.
எனவே இந்து சமய வழிபாட்டு நாகரிகம், சிந்து சமய நாகரீகத்தின் போது தோன்றியுள்ளது என்பதை வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஹரப்பா, மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள குறியீடுகளைப் போலவே தமிழ்நாட்டில் காவிரி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாடிகளில் இருக்கும் குறியீடுகள் ஒன்றாக இருப்பது வியப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்தியாவில் தான் முதல் முதலில் இந்தியர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதன் பின்னரே இவர்கள் வட பகுதியை நோக்கி குடியேற ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற ரீதியில் ஆன ஆய்வுகள் தற்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
இதற்குக் காரணம் மரபியல் ரீதியில் மேற்கொண்ட ஆய்வில் வட இந்தியர்களின் மரபணு, ஐரோப்பிய மரபணு உடன் ஒத்துப் போகிறது. இதன் மூலம் மிகவும் தொன்மையான மரபைச் சார்ந்தவர்கள் தென்னிந்தியர்கள் என்பது புலனாகிறது.
அதுமட்டுமல்லாமல் தென்னிந்தியர்களின் மரபணுவும், அந்தமான் நிக்கோபார் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் மூதாதையர் மரபணுவும் ஒரே மாதிரியாக இருப்பதால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் எந்த பகுதியில் இருந்து அங்கு பிரிந்து சென்றிருக்கக் கூடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
எனவே இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பவர்கள் தென்னிந்தியாவில் வசித்த மக்கள் என்பது ஊர்ஜிதமான நிலையில் அதற்கான ஆதாரங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கிடைத்துள்ளது.
குறிப்பாக கிமு 1000 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைக்கப்பட்ட மண் பாண்டங்களில் உள்ள எழுத்துக்கள் நமது இலக்கண இலக்கிய நூல்களில் உள்ள குறிப்புகள் போன்றவை தான் இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்பதை ஆணித்தரமாக நமக்கு பறைசாற்றுகிறது.
இதனை அடுத்து “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்பது உண்மையாகி விட்டது என கூறலாம். மேற்கூறிய கருத்துக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது எண்ணங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.