• July 27, 2024

தமிழ் பிராமி எழுத்துக்கள் உலகம் முழுவதும் இருந்ததா? – கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் பற்றி படிக்கலாமா?

 தமிழ் பிராமி எழுத்துக்கள் உலகம் முழுவதும் இருந்ததா? – கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் பற்றி படிக்கலாமா?

Tamil-Brahmi

‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” – என்று தமிழின் பெருமையை அடுக்கிக் கொண்டு செல்லலாம். அப்படிப்பட்ட தமிழில் எழுதப்பட்ட பழங்கால பிராமி எழுத்துக்கள் உலகம் முழுவதும் பரவியிருந்ததா? 

அப்படி பரவி இருந்தது என்றால் அது எந்தெந்த பகுதியில் பரவி இருந்தது என்பது பற்றி விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Tamil-Brahmi
Tamil-Brahmi

கிமு ஒன்றாம் நூற்றாண்டில் உடைந்த ஜாடி ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் இருந்தது. இதில் பானையில் “ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த பானையானது எகிப்தில் இருக்கும் லெக்குஸ் லிமன் என்ற பகுதியில் அகழ்வாய்வின்போது கண்டெடுக்கப்பட்டது.

இது போலவே எகிப்தில் இருக்கும் பெரின்ஸ் ரொக்ளோடிசியா என்ற குடியேற்ற பகுதிகளிலும், அதே நூற்றாண்டில் உடைந்த ஜாடியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் தாய்லாண்டில் குவான் லுக் பட் என்ற இடத்தில் கிமு 2 நூற்றாண்டில் மண் பானையிலும், 3 மற்றும் 4-காம் நூற்றாண்டில் உரைகல் ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

Tamil-Brahmi
Tamil-Brahmi

இதுபோலவே ஓமன் நாட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பானை “சிதில்” கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் “ணந்தை கீரன்” என்ற சொல் உள்ளது. இது முதலாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் இதனை ஓமனில் கண்டறிந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் இலங்கை நாட்டில் கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்ட துண்டுகள் பூநகரியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கிமு மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு, சிவப்பு மட்பாண்டங்கள் கண்டனோடையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் இருந்த பானைகள் இலங்கையின் திசமகாராமையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவை கிபி இரண்டாம் நூற்றாண்டு பானைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கேரளாவில் உள்ள குகைகளிலும், மலைகளிலும் கண்டுபிடிக்கப்பட்டது அதில் “சேரன்” என்ற சொல் காணப்படுகிறது.

Tamil-Brahmi
Tamil-Brahmi

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆதிச்சநல்லூர் இரும்பு காலத்தை சேர்ந்த தாழிகளில் சுமார் கிமு 500 கால தமிழ் பிராமி எழுத்துக்கள் ஈரோட்டுக்கு அருகில் உள்ள சென்னி மலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல பழனிக்கு தெற்கு மேற்கில் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமா.? தமிழ் பிராமி எழுத்துக்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மூ, நா, க, ரா எனவும் மு, க, கா, டி என்ற எழுத்துக்கள் இருந்தது. இது முதலாம் நூற்றாண்டுக்கு உரியது என வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது 

மேலும் ஐந்தாம் வீரர் கல் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் பொற்பனம் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழில் பிராமி எழுத்துக்கள் உலகம் முழுவதும் பரவி இருந்ததற்கு இவை சான்றுகளாக உள்ளது என்று கூறலாம்.