பேய்களால் கட்டப்பட்ட சிவன் கோயில்..! – மறைந்திருக்கும் அமானுஷ்யங்கள்..
இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள், இடங்கள்,கோட்டை கொத்தலங்களுக்கு பஞ்சமில்லாமல் பல பகுதிகள் காணப்படுகிறது. இங்கு காணப்படும் ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு விதத்தில் தனி தன்மையுடன் விளங்குவதோடு, அந்தப் பகுதியின் வரலாற்றையும் நமது புராணக் கதைகளையும் எடுத்து கூறும் விதத்தில் அமைந்திருக்கும்.
அந்த வகையில் ஒரே இரவில் கட்டப்பட்ட சிவன் கோயில் அதுவும் பேய்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படக்கூடிய சிவன் கோயிலைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இங்கு ஏதோ அமானுஷ்ய சக்தி உள்ளது என்று இன்று வரை மக்களால் நம்பப்படுகிறது. அவை உண்மையா? என்பதை பற்றியும் பார்க்கலாம்.
இந்தக் கோவிலானது மத்திய பிரதேசத்தில் குவாலியர் நகரத்திலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிஹோனியாவில் அமைந்துள்ள கக்கன்மாத் கோவில் ஆகும்.
சிவபெருமானை முக்கிய மூலவராகக் கொண்டு இருக்கும் இந்த கோவில் சுற்றுலா பயணிகளை பெரிதளவு ஈர்க்கக்கூடிய ஒன்று. இதற்கு காரணமே இந்த கோயில் பேய்களால் கட்டப்பட்டது என்று பலரும் கூறுவதால் தான்.
எந்த விதமான பூச்சு கலவையும் இல்லாமல் இந்த கோயிலானது வெறும் கற்களால் கட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல் சுமார் 115 அடி உயரத்தில் அமைந்து இருக்கும் இந்த கோயில் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்று உள்ளூர் வாசிகள் கூறுகிறார்கள்.
அட.. அது எப்படி ஒரு கோயிலை கட்ட ஒன்று கல்லால் கட்டி இருக்க வேண்டும் அல்லது சுண்ணாம்பு செங்கற்களை கொண்டு சாந்து பூசி கட்டி இருக்க வேண்டும். இவை ஏதும் இல்லாமல் இந்த கோவில் வெறும் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது என்பது தான் மர்மமான அமானுஷ்யமாக உள்ளது.
புராணக் கதைகளின் படி இந்தக் கோவிலை கட்டுவதற்கு பேய்களுக்கு சிவபெருமான் உத்தரவிட காலை விடிவதற்குள் தனக்கு ஒரு கோயில் வேண்டும் எனக் கூறியதை அடுத்து இந்தக் கோயில் பேய்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
இன்னும் சிலர் இந்த கோயிலை கச்வாஹா வம்சத்தின் கீர்த்தி மன்னர் தனது மனைவிக்கு கட்டியதாக சிலர் கூறி வருகிறார்கள். அவரோடு சிவ பக்தர் என்பதால் இந்த சிவன் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனாலும் பேய்களால் கட்டப்பட்டது என்பதை தான் பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்.
இதனை அடுத்து இந்த கோயிலை காண பக்தர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் அதிக அளவு இந்த இடத்திற்கு வந்து செல்கிறார்கள்.