உயிரை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர் ! குவியும் பாராட்டுக்கள் !
சென்னையில் இன்று பெய்த கன மழையால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்தும் மரங்கள் கீழே விழுந்தும் சேதமாயின. இந்நிலையில் சுயநினைவற்று கிடந்த ஒரு மனிதரை தனது தோள்களில் தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
சத்திரம் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, யாரோ ஒருவர் இறந்து கிடப்பதாக தனக்கு கிடைத்த செய்தியை கேட்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே போனவுடன் அந்த மனிதருக்கு உயிர் இருப்பது தெரிய வந்துள்ளது.
யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த மனிதரை தனது தோள்களில் தூக்கி சுமந்து ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். தைரியத்துடனும் துணிச்சலுடனும் இந்த காரியத்தை செய்ததற்காக காவல்துறையினரிடம் இருந்தும் மக்களாலும் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இந்த வீடியோவில் அவர் அந்த மனிதரை தனது தோளில் சுமந்து கொண்டு அருகில் இருப்பவர்களை ஒரு ஆட்டோவை அழைத்து வரச் சொல்கிறார். பின்னர் ஆட்டோவில் அந்த மனிதரை ஏற்றிவிட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி கூறுகையில், “இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எவரின் உதவியையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு தாங்களே இறங்கி முன் வந்து சேவை செய்ய வேண்டும் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கடமையை நான் செய்தேன்.” என கூறியுள்ளார்.
காவல் ஆய்வாளர் என்பதையும் தாண்டி மனிதநேயத்தை நிலைநாட்டி ஒரு உயிரை காப்பாற்ற பாடுபட்ட காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களுக்கு deep talks தமிழ் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்ப்பது ஏன்? உடல் நலனுக்கு நல்லதா?
- வயல்வெளியில் விமானம் தரையிறங்கினால் என்ன நடக்கும்?
- ஹிட்லரின் யூத வெறுப்பு: நாஜி ஜெர்மனியின் இருண்ட காலம் – ஏன் இந்த பேரழிவு நடந்தது?
- பாம்புகள் பழி வாங்குமா? உண்மையும் புனைவும் – ஓர் அறிவியல் பார்வை
- பத்திரிகை ஓரத்தில் உள்ள வண்ண வட்டங்கள்: அச்சுத் தொழில்நுட்பத்தின் மறைக்கப்பட்ட ரகசியம் தெரியுமா?
ராஜேஸ்வரி அந்த சுயநினைவின்றி கிடந்த மனிதரை தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.