• October 3, 2024

இனி வரும் I-phone-களில் Sim Card போட முடியாதா ???

 இனி வரும் I-phone-களில் Sim Card போட முடியாதா ???

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் XR மற்றும் XS ஆகிய மாடல் போன்களில் e-sim தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இனி வெளியாகும் எந்த ஒரு ஐ-போனிலும் சிம் கார்டுகள் பொருத்தம் படி slot-கள் இருக்காது எனவும், e-sim முறையே தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

2023ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ள ஐபோன் 15 pro சிம் கார்டு slot இல்லாமல் e-sim மூலம் இயங்கும் ஐபோன் மாடலாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அவர்களுடைய நெட்வொர்க் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு தங்களது சிம்மை e-sim ஆக மாற்றிக் கொள்ளலாம்.

Apple's new iPhones use eSIM technology, but only ten countries in the  world support it - The Verge

இரட்டை சிம் செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில் 2 e-sim card-களுக்கான ஆதரவு பின்வரும் ஐபோன்களில் கொடுக்கப்பட்டிருக்கும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. சிம் கார்டு ஸ்லாட் அகற்றுவது மொபைல் போனின் நீர் எதிர்ப்பு சக்தியை மேலும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது.

இனிவரும் ஐபோன் pro மாடல்கள் மட்டும் e-sim-களால் இயங்குமா அல்ல அனைத்து ஐபோன்களுமே e-sim-களால் இயங்குமா என்பதை குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

e-sim முறை மட்டுமின்றி QLC ப்ளாஷ் ஸ்டோரேஜ் எனும் தொழில்நுட்பத்தையும் இனிவரும் ஆப்பிள் மொபைல்கள் உள்ளடக்கி இருக்கும் என தகவல்கள் வெளியாகிறது. இதன்மூலம் மொபைலின் ஸ்டோரேஜ் ஆனது 2 TB வரை அதிகரிக்கக்கூடும். இந்த ஃபிளாஷ் storage தொழில்நுட்பத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான தகவல்களை வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போன்களில் சேமித்துக் கொள்ள முடியும்.

eSIM in iPhone XS, XS Max and iPhone XR Won't Be Available at Launch, Apple  to Activate Later - MacRumors

அடுத்த ஆண்டு வெளியாக உள்ள ஐபோனில் 48 மெகாபிக்சல் கேமரா லென்சை ஆப்பிள் நிறுவனம் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பெரிஸ்கோப் lens-ஐயும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு திரைப்படத்தை படம்பிடிக்கக் கூடிய அளவிற்கு ஆப்பிள் போன்களில் கேமராக்கள் உயர்தரத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த புதிய லென்ஸ்கள் ஆப்பிளின் கேமராவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொழில்நுட்பத்தை அதன் புதிய வளர்ச்சிக்கு எடுத்துச் செல்வதில் ஆப்பிள் நிறுவனம் முக்கிய பங்களிக்கிறது. இன்று நாம் உபயோகிக்கும் பல மொபைல் போன்களில் உள்ள பல வித்தியாசமான அம்சங்கள் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone With eSIM To Debut Soon To Provide Seamless Communication - Dazeinfo

ஸ்மார்ட் இஉலகிற்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு முன்னோடி என்று சொன்னால் அது மிகையாகாது. ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒவ்வொரு புதிய அப்டேட்டின் போதும் இன்பஅதிர்ச்சி கொடுப்பதே ஆப்பிள் நிறுவனத்திற்கு வழக்கம். அந்த வகையில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெளியாக உள்ள ஆப்பிள் product-களில் ஒளிந்திருக்கும் அந்த இன்பஅதிர்ச்சி என்னவாக இருக்கும் என இப்போது இருந்தே சமூக வலைதளங்களில் தொழில்நுட்ப பிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.