மீண்டும் வருகிறதா இரவு நேர ஊரடங்கு ???

நாட்டின் தலைநகரான டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு விதிக்கப்படும் என நகர அரசாங்கம் என்று கூறியுள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுக்குள் வைக்க இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ்-ன் புதிய பரிமாணமாக Omicron வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. இந்நிலையில் நாளை இரவு முதல் இரவு நேர ஊரடங்கு டெல்லியில் கடைபிடிக்கப்படும் என டெல்லி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், சமூக மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கான தடை மற்றும் பார் /உணவகங்கள் 50 சதவீத இருக்கை வசதியுடன் செயல்படுவதற்கான தடை போன்ற கோவிட் கட்டுப்பாடுகளை டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு வரை நீடித்துள்ளது. இது விடுமுறை காலம் என்பதால் மக்கள் அதிக அளவில் வெளியே நடமாடுவதை தவிர்க்கவே இது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக டெல்லி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசியல், சமூகம். கலாச்சாரம் மற்றும் மத கூட்டங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூட வாய்ப்புள்ள கூட்டங்களுக்கு ஜனவரி 1ஆம் தேதிவரை டெல்லியில் அனுமதி இல்லை. டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 290 புதிய Covid-19 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது சனிக்கிழமையை விட 40 பதிவுகள் அதிகம்.
இனிவரும் கொரோனா அலைகளில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, அரசாங்கம் காட்டும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். டெல்லி மட்டுமின்றி இந்தியாவில் உள்ள வேறு சில மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் தமிழகத்திலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளை ஆன்லைன் வகுப்புகளாக நடத்த மருத்துவர் குழுவிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக கடற்கரைகளிலும். பொது இடங்களிலும் மக்கள் கூடுவதை தவிர்க்க தமிழகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உலக கிரிக்கெட் வீரர்களை மிரள வைத்த இந்திய வீரர். யார் இந்த முகமது ஷமி?
- தேவதாசிகளா? தேவரடியார்களா? யார் இவர்கள்? பதறவைக்கும் உண்மைகள்
- தமிழ் சினிமாவின் பொக்கிஷம் – மிரளவைக்கும் ரோகிணி திரையரங்கு வரலாறு
- அமெரிக்காவில் உலகின் 2வது மிகப்பெரிய இந்து கோயில். அப்படியென்றால் அங்கே இருக்கும் கடவுள் யார்?
- பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் விபத்து: 10 பேர் பலி
அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்றுவது மட்டுமின்றி, இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தானாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எப்பேர்பட்ட கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தாலும் அதை பின்பற்ற வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்றி இனிவரும் காலங்களில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு, Deep Talks தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.