• March 29, 2024

கொரியன் மொழியில் இருக்கும் தமிழ் வார்த்தைகள் ! விசித்திர வரலாறு !

 கொரியன் மொழியில் இருக்கும் தமிழ் வார்த்தைகள் ! விசித்திர வரலாறு !

உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி என ஒவ்வொரு தமிழரும் கர்வத்துடன் சொல்கிறோம். தமிழ் மொழியில் பேசப்படும் சில வார்த்தைகள் கொரியன் மொழியிலும் பேசப்படுகிறது என்று சொன்னால், அது நம்பும்படியாக இருக்கிறதா???… ஆம் கொரியன் மொழிகளில் சில வார்த்தைகள் தமிழ் மொழியின் வார்த்தைகளை போலவே இருப்பதுடன், ஒரே அர்த்தத்தையும் கொடுக்கிறது.


இந்த இரு மொழிகளுக்கும் இணையான வார்த்தைகளை மொழியியல் வல்லுனர்கள் திராவிட கொரியன் மொழிகள் என குறிப்பிடுகின்றனர். திராவிட மொழிகளுக்கும் கொரியன் மொழிக்கும் இருக்கும் தொடர்பை மையப்படுத்தி பிரபல மொழியியல் வல்லுநர் ஹோமர் ஹுல்பெர்ட், The Origin of Japanese Language என்ற புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

Tamil language | Origin, History, & Facts | Britannica

இந்த புத்தகத்தில் பெரும்பாலான தமிழ் வார்த்தைகளை கொரியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் உபயோகிப்பதை குறித்து விளக்கி எழுதியுள்ளார். கொரியன் மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இருக்கும் ஒற்றுமையை முதன்முதலில் கொரியாவில் இருந்த பிரஞ்ச் மிஷனரிகள் கண்டுபிடித்தனர்.


தமிழில் பேசப்படும் நான், நீ, அப்பா, அம்மா, அண்ணி, வெட்டுக்கிளி, புல், பால், வா, எழ/எழு, ஐயோ, இது, நாள், கொஞ்சம், ஒண்ணு ஆகிய வார்த்தைகளுக்கு தமிழில் என்ன அர்த்தமோ கொரியன் மொழியிலும் அதே அர்த்தம் தான்.

மொழிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது ஏறத்தாழ 1300 வார்த்தைகளுக்கு கொரியன் மொழியிலும் தமிழ் மொழியிலும் ஒரே அர்த்தம் உடைய வார்த்தைகள் உள்ளது என கூறுகின்றனர்.


On this day, when Tamil was declared as the first classical language of  India: Interesting facts you must know

கொரியாவின் கயா கூட்டமைப்பின் மாநிலமான கியூம்க்வான் கயாவின் முதல் ராணியாக இருந்த ஹியோ ஹ்வாங்-ஓக், இந்தியாவின் கன்னியாகுமரியிலிருந்து வந்தவர் என்று கூறுகின்றனர். இது கூட தமிழ் மொழி கொரியாவுக்குள் வருவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். அதுமட்டுமின்றி பண்டைய காலங்களில் நடைபெற்ற வணிக போக்குவரத்தும் மொழி பரிமாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்க கூடும்.


இந்தியாவிலுள்ள பல மொழிகளில் தமிழின் சாயலை நாம் பார்த்திருந்தாலும், கொரியா போன்ற அயல்நாடுகளின் மொழிகளிலும் தமிழின் சாயல் தென்படுவது வியப்பளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. கொரியன் மொழி மட்டுமின்றி ஜப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையே 500 வார்த்தைகள் ஒரே அர்த்தம் உடைய வார்த்தைகளாக இருக்கிறது என ஜப்பானின் மொழியியல் வல்லுநர் சுதோமு காம்பே கூறுகிறார்.

தமிழ் மொழி பல நாடுகள் கடந்து பல மொழிகளில் பல்வேறு ரூபத்தில் ஒலித்துக் கொண்டிருப்பது தமிழர்களாகிய ஒவ்வொருவரும் பெருமைப்படக்கூடிய விஷயம்.


இதுபோன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.