உலக வெப்பமயமாதல் காரணமாக கடலின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்து வருவதோடு, சுற்றுச்சூழலும் பல வகையான மாற்றங்கள் ஏற்பட்டும் வருவதாக விஞ்ஞானிகள் கருத்துக்களை பல வகைகளில் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது உலகம் வெப்பமயமாதல் என்ற சகாப்தத்தை விடுத்து விட்டு தற்போது அதன் கொதி நிலை அதிகரித்து உள்ளதால், உலகில் கடற்கரை ஓரங்களில் இருக்கக்கூடிய பல நகரங்கள் மட்டுமல்லாமல் முக்கியமான சில தீவுகளும் அழிவை சந்திக்க கூடிய விளிம்பில் உள்ளது என்ற செய்தி பலரையும் பயமுறுத்தி உள்ளது.
அதில் முக்கியமாக இந்திய பெருங்கடலில் இருக்கக்கூடிய பல தீவுகளில் ஒன்றாக திகழும் மாலத்தீவு மிக விரைவில் நீரில் மூழ்கும் தெளிவாக இருக்கும் என்ற அதிர்ச்சிகரமான விஷயத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.
பண்டைய காலத்தில் தமிழர்களால் ஆட்சி செய்யப்பட்ட மாலத்தீவு இந்தியாவின் தெற்கு இந்திய பெருங்கடலில் ஒரு மாலை போன்ற அமைப்பில் இருப்பதால் தான் இதற்கு மாலத்தீவு என்ற பெயர் வந்தது.
இந்த தீவில் தமிழ் மற்றும் மலையாள கலாச்சாரம் அதிக அளவு காணப்படுகிறது. மேலும் மலையாளம் முக்கிய மொழியாக உள்ளது. இந்த தீவை பொருத்தவரை சுமார் 26 தீவு கூட்டங்களை ஒருங்கே கொண்டது. இதில் சுமார் 1192 குட்டி தீவுகள் உள்ளது. இதில் 200 தீவுகளில் மட்டும் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகை 4 லட்சத்தில் 77 ஆயிரத்து 756 ஆகும்.இதன் தலைநகரான மாலியில் மட்டும் அதிக நபர்கள் வாழ்ந்து வருகிறார்கள். உலகிலேயே அதிக அளவு மக்கள் உள்ள அடர்த்தியான வாழும் நகரங்களில் ஒன்றாக இந்த மாலி திகழ்கிறது.
இந்த தீவை சோழர்கள் காலத்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள். அதன் பின்பு சிங்களவர்கள் இந்த தீவை கைப்பற்றி இருக்கிறார்கள். புத்த மதம் தலை தோங்கி இருக்கும் இந்த பகுதிகளில் 1153 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள மக்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டார்கள். இதனை அடுத்து சுல்தான் ஆட்சி அங்கு நடைபெற்றது.
இந்தத் தீவை போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். பின்னர் இந்த தீவானது குடியரசு நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.
சுற்றுலாவை முக்கிய தொழிலாகக் கொண்டிருக்கும் இந்த தீவு தற்போது சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்பட்டிருக்க கூடிய மிகப் பெரிய விளைவால் விரைவில் கடலுக்குள் முழ்கும் தீவாக மாறவுள்ளது. இயற்கை அழகோடு இருக்கும் இந்த தீவை நமது எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல முடியாத நபர்களாக நாம் இன்று மாறிவிட்டோம்.
இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசு என்பதை புரிந்து கொண்டு இனியாவது சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்த கூடிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.