பேய்கள் பற்றிய அறிந்திடாத பல உண்மைகள்.. பயந்திடாமல் படியுங்கள்..
பிறப்பு என்று இருப்பது போல இறப்பு என்று ஒன்று நிச்சயம் உள்ளது என்பதை புரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் பேய்களைப் பற்றி பேசும் போது கண்களை இறுக்கமாக மூடிக்கொள்வார்கள். சிலர் பயம் இல்லாதது போல நடிப்பார்கள். எனினும் அவர்களது மனதுக்குள் அவற்றைப் பற்றிய எண்ணங்கள் சற்று அச்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பேய்களாக மாறும். அவை எப்போதும் உறங்காது. தங்களது சாவுக்கு நீதி கிடைக்கும் வரை அலைந்து கொண்டே இருக்கும்.
எந்த நேரத்திலும் தங்களை வெளிப்படுத்த இவை விரும்பும். எனவே தான் அவை இருக்கும் இடங்களில் அதிக அளவு நறுமணம் மற்றும் புகைகள், பனிமூட்டங்கள் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய சக்தி அவற்றிற்கு உண்டு.
இவர்களுக்கு மனிதர்களுக்கு நிகழக்கூடிய எதிர்காலத்தைப் பற்றி மிக நன்றாக தெரியும். அவற்றை கனவுகளின் மூலம் சில சமயம் மனிதர்களுக்கு வெளிப்படுத்த முயற்சி செய்யும்.
மனிதர்களுக்கு ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ் ரத்தம் இருக்கும் இந்த வகை ரத்த பிரிவினர்களுக்கு பேய்கள் கண்களில் எளிதில் தெரியும். கூட்டமாக ஜனங்கள் இருக்கும் போது அவர்கள் இருப்பதை பேய்கள் விரும்பாது தனியாக செய்பவரை மட்டுமே பின் தொடர்ந்து செல்லும்.
தங்களுடைய ஆசையை பூர்த்தி செய்து கொள்ள சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கும். தக்க சந்தர்ப்பம் கிடைத்தால் அதைக் கொண்டு அவற்றின் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ளும்.
இந்த பேய்கள் மூலம் பெரும்பாலும் பெண்கள் தான் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களது பலவீனமான மனநிலை என்று கூட கூறலாம்.
நிறைவேறாத ஆசையோடு இருக்கும் இவற்றின் ஆசைகள் நிறைவேறி விட்டார். யாரையும் துன்புறுத்தாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இவை இருக்கும்.
அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இவற்றின் தாக்கம் அதிகரிக்கலாம். அதுபோல இவற்றைக் கட்டுப்படுத்தி பல விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் மாந்திரீக செயல்களில் ஈடுபடுவது உண்டு.
இது போன்ற மர்மமான அமானுஷ்ய விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதுவும் பேய்களைப் பற்றிய விஷயங்கள் தெரிந்திருந்தால் எங்களோடு நீங்கள் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள்.