வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று வடதமிழகத்தில் கரையை கடந்தது. இதன் விளைவாக சென்னையிலும் தமிழகத்தின் மற்றும் பல மாவட்டங்களிலும் அதி கனமழை அடித்து ஊற்றியது.
குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும் வீதிகளிலும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தும் சேதமானது. இந்நிலையில் இந்த சேதத்திற்கு காரணமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரண்டு மணி நேரத்தில் கரையை கடந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவில் இருந்து வட தமிழகத்தில் பெய்த அதி கனமழையானது இனி இருக்காது எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று பெய்த கனமழையின் எதிரொலியாக சென்னையின் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனை சரி செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை முழுவதுமாக கடந்து செல்ல இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அது சற்றே கரையைக் கடந்து இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதி கன மழைக்காக விடப்பட்டிருந்த ரெட்அலர்ட் தற்போது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு விலக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் நாளை முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
- எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை
- விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?
- விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?
- மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!
- ‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கிய பின் வெளியிடப்பட்ட வானிலை புகைப்படத்தை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.
