• October 3, 2024

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைகள் !!!

 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைகள் !!!

புத்தாண்டு வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்த தமிழக அரசு மேலும் என்னவெல்லாம் கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது என்பதை பற்றிய பதிவுதான் இது.

சென்னையில் உள்ள நீலாங்கரை, பெசன்ட் நகர், மெரினா, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மக்கள் ஒன்று கூடவும், கொண்டாட்டங்களில் ஈடுபடவும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணிமுதல் அனுமதி கிடையாது. இந்த பகுதிகளில் டிசம்பர் 31 இரவு 9 மணிமுதல் வாகனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Is New Year celebration allowed in Bangalore: Here are the rules - Oneindia  News

ஓட்டல்கள், தங்கும் வசதி கொண்ட உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. ஹோட்டல்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள், DJ இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.

சென்னையில் உள்ள காமராஜர் சாலை, ஆர்கே சாலை, ராஜாஜி சாலை, அண்ணா சாலை, ஜி.எஸ்.டி சாலைகளில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. அதுமட்டுமின்றி டிசம்பர் 31 இரவு பைக் ரேஸில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்கில் கிளப்புகள் போன்றவற்றில் வர்த்தகரீதியான நிகழ்ச்சிகளை நடத்தவும் புத்தாண்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கட்டிடங்களிலும் மக்கள் கூடியிருந்தது புத்தாண்டு கொண்டாட கூடாது.

அடுக்குமாடி குடியிருப்புகள். வில்லா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் தங்களது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சேர்ந்து ஒன்றுகூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

New Year Parties 2022 - 30 Best Places In India To Celebrate (Updated List)!

Omicron வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. மக்கள் கூட்டமாகக் கூடி கொண்டாடும் பண்டிகையான புத்தாண்டு கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே தமிழக அரசு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் விமர்சையாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு பொது மக்கள் அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகளை கேட்டு பின்பற்றி புத்தாண்டு கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்து இருங்கள்.