• October 3, 2024

ஒவ்வொரு நொடியும் 2 பேருக்கு கொரோனா ! அதிர்ச்சி தகவல் !

 ஒவ்வொரு நொடியும் 2 பேருக்கு கொரோனா ! அதிர்ச்சி தகவல் !

கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் மீண்டும் அதிகம் ஆகியுள்ள நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் திடுக்கிடும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரான்சில் 208000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்திலேயே ஒரே நாளில் அதிக பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது இதுவே முதல் முறை. கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாடு அடிக்கடி கொரோனாவின் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் நாட்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Covid in Europe: second wave gathers pace across continent | Coronavirus |  The Guardian

இந்நிலையில் அந்த எண்ணிக்கையை முறியடிக்கும் வகையில் நேற்று 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நொடியும் பிரான்ஸ் நாட்டில் இரண்டு பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் எனும் அதிர்ச்சிகரமான தகவலை பிரான்ஸ் நாட்டின் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

கொரோனாவின் டெல்டா வகையால் மருத்துவமனைகளும் நோயாளிகள் நெம்பி வழிகிறது. இதே நிலை தொடர்ந்தால் பிரான்ஸ் நாடு மேலும் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்படும். கொரோனாவின் புதிய வகையான ஓமைக்ரான் இன்னும் பிரான்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பிரான்ஸ் நாட்டில் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் நிறைய பேர் தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட நிலையிலும் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. கொரோனா தொற்றிலிருந்து விடு பெற அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பிரான்ஸ் மக்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

Number of French COVID-19 patients in intensive care rises for second day |  Reuters.com

ஏற்கனவே இந்தியாவில் ஓமைக்ரான் பரவலின் காரணமாக ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டை போல இந்தியாவிலும் கொரோனா தொற்று உச்சங்களை தொடாமல் இருக்க மக்களாகிய நாம் அனைவரும் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மதித்து அவைகளை பின்பற்ற வேண்டும்.

கொரோனா எவ்வளவு வேகமாக பரவக் கூடிய ஒரு நோய் என்பதற்கு பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலையே ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.