• July 27, 2024

5 வினாடிகளுக்கு Oxygen இல்லையென்றால் என்ன ஆகும் ???

 5 வினாடிகளுக்கு Oxygen இல்லையென்றால் என்ன ஆகும் ???

இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் Oxygen இன்றி வாழ முடியாது என்பது நாம் அறிந்ததே. நம் வாழ்வின் முக்கிய மூலதனமான அந்த ஆக்சிஜன் மரங்களில் இருந்து தான் நமக்கு கிடைக்கிறது.

நம் சுற்றுச்சூழலானது 78% நைட்ரஜனாலும் 21% ஆக்சிஜனாலும், 1 % மற்ற வாயுக்களாலும் நிறைந்துள்ளது. மரங்கள், செடிகள் ஆகியவை கார்பன்-டை-ஆக்ஸைடை உள்வாங்கி ஆக்ஸிஜன்-ஐ வெளியிடும். மற்ற உயிரினங்களின் சுவாசப்பையானது ஆக்சிஜன்-ஐ உள்வாங்கி கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடும்.

Let's learn about trees | Science News for Students

நம்மில் பலரால் அதிகபட்சம் 30 வினாடிகள் வரை மூச்சு விடாமல் இருக்க முடியும். இந்த உலகம் முழுதும் ஆக்ஸிஜனால் நிரம்பியிருக்கும் போது 30 வினாடிகள் ஆக்ஸிஜனை சுவாசிக்காமல் இருப்பது நம்மில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால் வெறும் ஐந்து வினாடிகளுக்கு இந்த உலகிலேயே ஆக்ஸிஜன் இல்லை என்றால் நிச்சயம் சாதாரணமான நிலை இங்கு இருக்காது.

அப்படி ஐந்து வினாடிகள் Oxygen இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவேளை 5 வினாடிகளுக்கு இந்த உலகில் ஆக்சிஜனே இல்லையெனில் Concrete-ஆல் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் பெரிய அளவில் பேரழிவை சந்திக்கும். ஏனெனில் கான்கிரீட்டில் ஒரு முக்கிய பங்கு ஆக்ஸிஜனுக்கு உள்ளது. ஆக்சிஜன் இல்லையெனில் கான்கிரீட் என்பது வெறும் தூசுக்கு சமம்.

அதுமட்டுமின்றி இந்த உலகத்தில் உலோகங்களால் (Metal) ஆன அனைத்து பொருட்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொள்ளும் நிலை ஏற்படும். உலோகங்களை ஒன்றோடு ஒன்று வைத்து முறையாக வெல்டிங் செய்வதற்கு ஆக்சிஜன் உதவுகிறது. ஆக்சிஜன் இல்லாத பட்சத்தில் இந்த உலோகங்கள் முறையான தோற்றத்தில் இல்லாமல் பிணைந்து போய்விடுமாம்.

Metal Finishing Technique Fusing

சூரியனிலிருந்து வெளிவரும் Ultra Violet கதிர்களிலிருந்து நம்மை காப்பாற்றும் ஓசோன் படலமானது ஆக்சிஜனால் உருவாக்கப்பட்டது. ஒருவேளை 5 வினாடிகளுக்கு ஆக்சிஜன் இல்லையெனில் ஓசோன் படலமும் இருக்காது. UV கதிர்கள் நம்மை நேரடியாக தாக்கி நமது உயிருக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த கதிர்கள் நம் மீது நேரடியாக பட்டால் நம் காதுகளின் உள் பகுதியானது வெடித்து சிதறும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2000 அடிகள் கடலுக்குள்ளே இரண்டு வினாடிகளில் பயணித்தால் என்ன ஆகுமோ, அதுதான் UV கதிர்கள் நம் மீது நேரடியாக படும் போது நம்மில் ஏற்படுமாம்.

UV Radiation | NCEH | CDC

ஆக்சிஜன் இல்லையெனில் இந்த உலகில் நெருப்பும் இருக்காது. திடீரென உலகிலுள்ள ஆக்சிஜன் மாயமாகும் பட்சத்தில், அந்த சமயத்தில் உலகில் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும், விமானங்களும் செயலிழந்துவிடும். Combustion எனும் முறையில் இயங்கக்கூடிய எந்த கருவியாயினும் ஆக்சிஜனின்றி இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் உலகின் மேல் ஓடானது (Crust) ஆக்சிஜனால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லையெனில் அந்த ஓடு நொருங்கி உலகில் உள்ள அனைத்து விஷயங்களும் மண்ணோடு மண்ணாக தரைமட்டம் ஆகிவிடும்.

வெறும் ஐந்து வினாடிகள் ஆக்சிஜனை இழந்தால் இந்த உலகமே அழியக்கூடும் என்பதே விஞ்ஞானம் உணர்த்தும் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை.

இது போன்ற பதிவுகளுக்கு Deep Talks தமிழ் உடன் இணைந்து இருங்கள்.