• December 5, 2024

தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் !!!

 தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் !!!

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி சிறந்த உள்ளாட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்குவது தமிழ்நாட்டில் வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் சிறந்த மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

South Indian City Guide | Tanjore - Indian Panorama

பல்வேறு செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த பட்டியலானது உருவாக்கப்படும். தஞ்சாவூர் மாநகராட்சி இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது அவ்வூர் மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சை மாநகராட்சிக்கு சுதந்திர தினத்தன்று விருதும் ரூ.25 இலட்சம் பரிசுத் தொகையும் தமிழக அரசால் வழங்கப்படும். இதே போல தமிழ்நாட்டின் சிறந்த நகராட்சியாக உதகை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த நகராட்சிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நாமக்கலில் உள்ள திருச்செங்கோடு நகராட்சியும், மூன்றாவது இடத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் நகராட்சியும் இடம்பெற்றுள்ளன. சிறந்த நகராட்சியான உதகை நகராட்சிக்கு சுதந்திர தினத்தன்று ரூ.15 லட்சமும், திருச்செங்கோடுக்கு ரூ.10 லட்சமும், சின்னமனூருக்கு ரூ.5 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Ooty | Vitara Tours

பேரூராட்சிகளின் பட்டியலில் முதலிடத்தை திருச்சியில் உள்ள கல்லக்குடி பேரூராட்சி பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கடலூரின் மேல்பட்டம்பாக்கம் பேரூராட்சி இரண்டாவது இடத்தையும், சிவகங்கையின் கோட்டையூர் பேரூராட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பேரூராட்சிகளுக்கு ரூ.10 லட்சம், 5 லட்சம், 1 லட்சம் வரிசை முறையே வழங்கப்பட உள்ளது.

இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழ் உடன் இணைந்திருங்கள்.