• September 13, 2024

Tags :Corona

இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி !!!

நாடு முழுவதும் கொரோனா நோய்க்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது. பூஸ்டர் டோஸ் குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம். முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள், மூத்த குடிமகன்கள் ஆகியோர்களுக்கு மூன்றாவது டோஸ் ஆன பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அரசாங்கம் செலுத்த உள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம் நோய்க்கான எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும் என்பது மருத்துவ நிபுணர்களின் நம்பிக்கை. பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு தகுதியானவர்கள் அருகிலுள்ள ஏதேனும் தடுப்பூசி […]Read More

ஒவ்வொரு நொடியும் 2 பேருக்கு கொரோனா ! அதிர்ச்சி தகவல் !

கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கும் மீண்டும் அதிகம் ஆகியுள்ள நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் திடுக்கிடும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரான்சில் 208000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்திலேயே ஒரே நாளில் அதிக பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது இதுவே முதல் முறை. கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாடு அடிக்கடி கொரோனாவின் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் நாட்டில் ஒரு லட்சத்து […]Read More

தமிழ்நாட்டிற்குள் நுழைந்த Omicron வகை கொரோனா !

கொரோனா வைரஸ்-ன் புதிய பரிமானமான ஓமிக்ரான் வைரஸ் தமிழகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டது. நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய 47 வயதான சென்னை நபர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு ஓமிக்ரான் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸுக்கான முதல் பதிவு இதுவே என சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக டிசம்பர் 10ஆம் தேதி வந்த பயணிக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆறு பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. […]Read More

கொரோனா வைரஸ் பட்டால் பச்சை வண்ணத்தில் மாறும் அதிசய மாஸ்க் !!

2019ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை கொரோனா ஒட்டு மொத்த உலகத்தையே ஆட்டிப் படைக்கிறது. இந்த நோய்க்கு தீர்வு காண பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்களும், வல்லுனர்களும் மக்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முகக்கவசத்தில் படர்ந்த உடன் அந்த முக கவசம் ஒளிரும் படியான ஒரு அரிய கண்டுபிடிப்பை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கியோட்டோ பெர்பெக்டுவரல் ( Kyoto Perfectural ) பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே இந்த அரியவகை கண்டுபிடிப்பை சாத்திய படுத்தியுள்ளனர். இவர்கள் […]Read More

தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் 593 பேர் பணிநீக்கம் !!!

கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் இந்த சூழலில் பெரும்பாலான நிறுவனங்களிலும், பள்ளிக் கல்லூரிகளிலும் தடுப்பூசி சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 593 பணியாளர்களை ஒரு தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. வாஷிங்டனின் முன்னணி விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் தங்களது நிறுவனத்தில் பணிபுரிவோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளது. அந்நிறுவனத்தில் பணிபுரியும் 67 ஆயிரம் பணியாளர்களில் 97% பணியாளர்கள் இந்த விதிமுறைக்கு […]Read More

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி ஊசி செலுத்தியதால் பரபரப்பு !!!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவர தடுப்பூசி ஒன்று தான் வழி என்பதை உணர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி போடும்போது மகாராஷ்டிராவில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் கேள்விப்படுவோரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஊரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றவருக்கு வெறிநாய் கடிக்கான ஊசியை சுகாதார மையத்தில் இருப்பவர்கள் செலுத்தியுள்ளனர். ராஜ்குமார் என்பவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அந்த ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு […]Read More