• March 27, 2024

கொரோனா வைரஸ் பட்டால் பச்சை வண்ணத்தில் மாறும் அதிசய மாஸ்க் !!

 கொரோனா வைரஸ் பட்டால் பச்சை வண்ணத்தில் மாறும் அதிசய மாஸ்க் !!


2019ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை கொரோனா ஒட்டு மொத்த உலகத்தையே ஆட்டிப் படைக்கிறது. இந்த நோய்க்கு தீர்வு காண பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்களும், வல்லுனர்களும் மக்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றனர்.


இந்நிலையில் கொரோனா வைரஸ் முகக்கவசத்தில் படர்ந்த உடன் அந்த முக கவசம் ஒளிரும் படியான ஒரு அரிய கண்டுபிடிப்பை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கியோட்டோ பெர்பெக்டுவரல் ( Kyoto Perfectural ) பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே இந்த அரியவகை கண்டுபிடிப்பை சாத்திய படுத்தியுள்ளனர். இவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த அரிய வகை முக கவசத்தில் கொரோனா வைரஸ் படர்ந்து விட்டால் அந்த முக கவசம் பச்சை கலரில் ரேடியம் போல ஒளிர்கிறது.


Coronavirus

இந்த முக கவசத்தால் கொரோனா வைரஸ் தங்களை நெருங்குவதைப் மக்கள் சுலபமாக கண்டுபிடித்து விட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். முககவசம் பச்சை நிறத்தில் ஒளிரும் பொருட்டு கொரோனா நோய்க்கான மருத்துவத்தை மக்கள் முன்கூட்டியே எடுத்துக் கொள்ளவும் முடியும்.


இந்த முகக்கவசம் இரண்டு மூலப் பொருட்களால் ஆனது. ஆஸ்ட்ரிச் முட்டைகளிலிருந்து எடுக்கப்படும் பிறபொருள் எதிரிகள் மற்றும் பச்சை நிற டையையும் (Die) கொண்டு இந்த அரியவகை முக கவசம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவர் யசுகிரோ சுகமோடோ எனும் ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்ட்ரிச் முட்டைகளை வைத்து இந்த கவசத்தை தயாரிப்பதற்கு காரணம், அதன் முட்டைகளில் வைரஸ் தாக்குதலை கண்டறியும் திறன் அதிகமாக இருக்குமாம். அந்த முட்டைகளிலிருந்து எடுக்கப்படும் பிறபொருளெதிரிகள் பச்சை வண்ண டை கொண்டு சாயம் பூசி முகக்கவசத்தில் கலந்து விடுவர்.


Coronavirus: Disposable masks 'causing enormous plastic waste' - BBC News

இந்த முகக்கவசத்திற்கு ஜப்பான் நாட்டின் அரசாங்கம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. விரைவில் இந்த முக கவசம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


கொரோனா நமக்கு இருக்கிறதா என்ற பரிசோதனை செய்யும் முன்பே முகக்கவசத்தின் வண்ணம் மாறுவதை வைத்து கொரோனா நமக்கு அருகில் வந்துவிட்டது என மக்கள் சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள அரியவகை வண்ணம் மாறும் திறன் உடைய முக கவசத்தை கீழே காணுங்கள்.


Scientists use ostrich cells to make glowing Covid detection masks |  Coronavirus | The Guardian

இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.