• March 27, 2024

வலியின்றி தற்கொலை செய்து கொள்ள உதவும் நவீன கருவி !!!

 வலியின்றி தற்கொலை செய்து கொள்ள உதவும் நவீன கருவி !!!

தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு எந்தவித வலியும் இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான பிரத்தியேக மிஷின் ஒன்றை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நவீன தற்கொலை இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து மருத்துவ வாரியமும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த பிரத்தியேக கருவியானது 3d பிரின்டர் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த கருவிக்கு சார்கோ Suicide pods என பெயர் சூட்டியுள்ளனர். தற்கொலை செய்து கொள்ள விரும்புவார்கள் இந்த சாக்கோ சூசைட் பாடிற்குள் சென்று படுத்துக் கொண்டால் போதும். சிறிது நேரத்தில் எந்தவித வலியும் இன்றி அவர்களது உயிர் பிரிந்து விடும்.

Gujarat's runaway in-laws commit suicide; police probe on

அந்த கருவிக்குள் சென்று படுத்துக் கொண்டதும், அந்த கருவி தற்கொலை செய்து கொள்வதற்கு என்ன காரணம் என கேட்குமாம். அந்தக் கேள்விக்கு பதில் அளித்த பின்னர் அந்த கருவிக்குள் இருக்கும் ஒரு பொத்தானை (Button) அழுத்த வேண்டும்.


கருவிக்குள் படுத்து இருப்பவர்களே இந்த கருவியை முழுமையாக இயக்கி கருவியில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை படிப்படியாக குறைத்து தங்கள் தற்கொலையை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் ஒரு நிமிடத்திற்கும் கம்மியான நேரத்தில் நிகழும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Suicide Machine: '1 ਮਿੰਟ 'ਚ ਬਿਨਾਂ ਦਰਦ ਤੋਂ ਮੌਤ', ਸਵਿਟਜ਼ਰਲੈਂਡ 'ਚ 'ਡੈਥ ਮਸ਼ੀਨ'  ਨੂੰ ਕਾਨੂੰਨੀ ਮਨਜ਼ੂਰੀ

ஹைபோக்சியா மற்றும் ஹைபோகேப்னியா ஆகிய முறைகள் மூலம் இந்தக் கருவிக்குள் உயிர் பிரியுமாம். அதாவது தற்கொலை செய்ய முடிவு எடுப்பவர்களுக்கு எந்தவித வலியும் இன்றி நிம்மதியாக தற்கொலை செய்துகொள்ள இந்த நவீன கருவி உதவும்.


மனிதர்களின் உயிரைக் காக்க பல்வேறு நாடுகள் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கி வரும் நிலையில், வழியின்றி உயிரை கொள்ள இப்படி ஒரு கருவியை கண்டுபிடித்த சுவிஸர்லாந்து விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு உலகெங்கும் பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு குறித்து சமூக வலைதளங்களில் காரசாரமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உரிய காரணங்களுக்காக பிறர் உதவியுடன் தற்கொலை செய்ய 1942ஆம் ஆண்டு முதலே அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் கோமா நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த சட்டம் பயனுள்ளதாக இருந்தது.


சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள சார்கோ Suicide pod புகைப்படத்தை கீழே காணுங்கள்.


இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.