• October 7, 2024

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி ஊசி செலுத்தியதால் பரபரப்பு !!!

 கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி ஊசி செலுத்தியதால் பரபரப்பு !!!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவர தடுப்பூசி ஒன்று தான் வழி என்பதை உணர்ந்து நாட்டு மக்கள் அனைவரும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி போடும்போது மகாராஷ்டிராவில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் கேள்விப்படுவோரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஊரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்றவருக்கு வெறிநாய் கடிக்கான ஊசியை சுகாதார மையத்தில் இருப்பவர்கள் செலுத்தியுள்ளனர். ராஜ்குமார் என்பவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அந்த ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

Rabies Risk Assessment: Test Your Knowledge

அங்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வரிசையில் நிற்பதற்கு பதில் வெறிநாய் கடிக்கான ஊசிபோடும் வரிசையில் தவறுதலாக அமர்ந்துள்ளார். மருத்துவ அட்டையை சரி பார்க்காமல் தடுப்பூசி போடுவதற்கு பதில் வெறிநாய் கடிக்கான ஊசியை ராஜ்குமாருக்கு செலுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பல நகைச்சுவையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தடுப்பூசி செலுத்துவதில் இப்படிப்பட்ட தவறு இழைத்த அந்த சுகாதார நிலையத்தின் மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.