ஜனவரி மாதம் வரை டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை !!!

வருகிற ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரை டெல்லியில் அனைத்து விதமான பட்டாசுகளையும் வெடிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாசு கட்டுப்பாட்டுக்கு மட்டுமின்றி இந்த கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும் தவிர்க்கவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
பொதுவாக தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பதற்கு தடைகள் விதிக்கப்படுவது வழக்கமே. ஆனால் தீபாவளிக்கு மட்டும் இன்றி வருகிற ஜனவரி மாதம் வரை அடுத்து வருகிற மூன்று மாதங்களுக்கும் பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மக்கள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த அறிவிப்பானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது என ஒரு தரப்பும், கொண்டாட்டங்களை தவிர்ப்பது சரியல்ல என மற்றொரு தரப்பும் சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பு குறித்து விவாதம் மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசுகள் வெடிக்காமல் இருக்கும் போதே காற்று பெரிய அளவில் மாசடைகிறது. இந்நிலையில் பட்டாசுகள் வெடிப்பதனால் காற்று மேலும் மாசடைந்து விடும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த அறிவிப்பினால் பட்டாசுகள் ஏதும் இல்லாத தீபாவளியை டெல்லி கொண்டாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்து இருங்கள்.