இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி !!!

நாடு முழுவதும் கொரோனா நோய்க்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது. பூஸ்டர் டோஸ் குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம்.
முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள், மூத்த குடிமகன்கள் ஆகியோர்களுக்கு மூன்றாவது டோஸ் ஆன பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அரசாங்கம் செலுத்த உள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதன் மூலம் நோய்க்கான எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும் என்பது மருத்துவ நிபுணர்களின் நம்பிக்கை.
பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு தகுதியானவர்கள் அருகிலுள்ள ஏதேனும் தடுப்பூசி மையத்திற்கு சென்று தங்களது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதைப் பற்றி அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
60 வயதிற்கு மேற்பட்டவர்களில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மற்றும் பிற நாட்பட்ட நோய்கள் உடையவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசிகள் மூலம் எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது என்பதே நிபுணர்களின் கருத்து.

பூஸ்டர் டோஸுக்கு தகுதியானவர்கள் கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்ற 9 மாதங்களுக்கு பிறகுதான் பூஸ்டர் டோஸை பெறுவார்கள். தடுப்பு ஊசி செலுத்தி 9 மாதங்கள் ஆகாத நிலையில் யாரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள கூடாது.
முதல் இரண்டு டோஸில் மக்கள் எந்த ஒரு தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டார்களோ பூஸ்டர் டோஸிலும் அதே தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு முதல் இரண்டு டோஸில் Cowaxin-ஐ எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டர் டோஸிலும் Cowaxin-ஐயே எடுத்துக் கொள்ள வேண்டும் மாறாக Covishield-ஐ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்த பூஸ்டர் டோஸை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் ஓமைக்ரான் வகை கொரோனாவின் வேகமான பரவல் தான். அடுத்தடுத்து வீரியம் அடையும் கொரோனா வைரஸ்-ல் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவே இந்த பூஸ்டர் டோஸ் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
ஏற்கனவே ஓமைக்ரான் அதிகமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு ஆளாகாமல் இருக்க அரசாங்கம் காட்டும் விதிமுறைகளை பின்பற்றி நோயற்ற வாழ்வை பெறுவதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.