• September 8, 2024

ஒரு தீவு முழுக்க கடற்கொள்ளையர்களின் புதையல்! எங்கே இருக்கிறது தெரியுமா?

 ஒரு தீவு முழுக்க கடற்கொள்ளையர்களின் புதையல்! எங்கே இருக்கிறது தெரியுமா?

வணக்கம் வாசகர்களே! உலகத்துல அடக்க முடியாத ஆர்வத்தை தரவல்லதுல மர்மங்களும் பெரிய பங்கு வகிக்குது தெரியுமா? இந்த முறை நாம பாக்க போற மர்மம் பணம் பற்றியது!

பக்கத்துக்கு வீட்டு காரன் ஏதாவது ஒரு பொருள் வாங்கினாலேஅவனுக்கு எங்கேர்ந்து எவ்ளோ பணம் வந்துருக்குமோன்னு ஒரு மர்மத்தை விடுவோம்!

இன்னிக்கி சொல்ல போறது, கனவிலும் காண முடியாத பெருஞ்செல்வம்! விரல் விட்டு என்ன முடியாத கொள்ளை பணம்.

கனடா

நம்ம எல்லாருக்கும் நல்ல தெரிஞ்ச ஒரு நாடு கனடா. அங்கே ஓக் தீவுன்னு ஒரு இடம் இருக்கு. ஓக் மரங்கள் அங்கே சூழ்ந்து இருப்பதால தான் அதுக்கு அந்த பெயர்.

Oak Island

இது ஒரு சின்ன தீவு. 1700-ல கேப்டன் கிட் என்பவர் அளப்பரிய செல்வத்தை அங்கே புதைச்சு வெச்சாராம். 1856 லிருந்து ஓக் தீவை தோண்ட ஆரம்பிச்சிட்டாங்க. அந்த தேடல் இன்னும் நின்ற பாடில்லை. இயற்கையை நாசப்படுத்துறீங்கன்னு அரசாங்கம் தடுத்தும் இந்த தூண்டல்கள் நிற்கவில்லை.

கிளியோபாற்றா (Cleopatra) மர்ம கல்லறை!

டானியல் என்ற ஒருவர் தான் இதை முதல் முதலில் கண்டு பிடித்தார். அவர் அங்கே போயிருக்கும் போது, ஒரு இடத்துல மட்டும் ஓக் மரங்களை வெட்டி ஏதோ அரைகுறையா போட்டு மூடி வெச்சிருப்பதை கண்டார்.

William Kidd

அடுத்த நாள் மண் வெட்டியோட வரார். ஒரு 10 அடி தோண்டினா ஒரு மரஅடுக்கு தென்படுது. இன்னும் ஒரு 10 அடி. அதே போல ஒரு மரத்தாலான அமைப்பு. திரும்பவும் தோண்டிருக்கார். அதே போல இன்னொரு அமைப்பு தென்படவே, இதுக்கு மேல ஆழ தோண்டணும்னா இந்த கருவி போதாதுன்னு போய்டறார்.

அவர் அடுத்த நடவடிக்கை எடுக்ககறதுக்குள்ள 8 வருஷம் கிட்ட ஆயிடுது. மீண்டும் நவீன கருவிகளோடு ஆட்களோடும் வந்து தோண்ட துவங்கி இருக்கார். தோண்ட தோண்ட ஒவ்வொரு அடுக்குக்கும் ஏதோ ஒன்னு வந்துகிட்டே இருந்துருக்கு.

Pic by: https://www.history.com/

தேங்காய் நார், அப்பறம் தண்ணீர், இப்படி வர மாதிரி அடுக்கி வைக்கப்பட்ட இது ஏதோ திட்டமிடப்பட்ட ஒன்னு இதுன்னு புரிஞ்சிக்கிட்டார்.

இதிலிருந்து அவங்க எடுத்த பொருட்களை வெச்சி பாத்தா, 17ஆம் நூற்றாண்டு வாக்கில் அந்த பக்கமா வந்த கடற் கொள்ளையர்கள் தான் பெருஞ்செல்வத்தை அங்கே புதைச்சு வெச்சிருக்கணும்னு முடிவு பண்ணி அறிவிச்சாங்க.

அப்படி செஞ்சவர்தான் நாம முன்னாமே சொன்ன கேப்டன் கிட். நானோ அல்லது சாத்தானோ தான் இந்த செல்வத்தை அடைய முடியும்னு வேற சொல்லிட்டு செத்து போயிருக்காராம்.

இன்னொரு செய்தியும் இங்க சுத்திகிட்டு இருக்கு. அதாவது முன்கூட்டியே எல்லா செல்வத்தையும் எடுத்துட்டு, இப்போ எதுவுமே இல்லனு சும்மா நாடகம் போடறாங்கன்னு. இதுக்கு ஓக் தீவின் சாபம்னு கூட ஒரு பெயர் இருக்கு.

மீண்டும் இன்னொரு மர்மத்தை அடுத்த முறை பாப்போம்..

பழைய மர்ம செய்திகளை பார்க்க :