• June 4, 2023

அதிகபட்சமாக ஒருவர் எவ்வளவு நேரம் தூங்க முடியும்?

 அதிகபட்சமாக ஒருவர் எவ்வளவு நேரம் தூங்க முடியும்?

2012-ல், லி ஷோவ் ஃபெங்ச்சு என்ற அப்போது 95 வயதான மூதாட்டி, தன் கிராமத்தினரால் இறந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டார். அவரை எழுப்பும் முயற்சிகள் தோற்கவே இவ்வாறு அறிவித்து விட்டனர்.

19 பிப்ரவரி 2012 அன்று, அவர் இறக்கப்பட்டதாகக் கூறி இரண்டு நாட்களுக்கு பிறகு, அவரை சவப்பெட்டியில் கிடத்தினர்.

அவர்களின் வழக்கப்படி, சுற்றாத்தாரும் நண்பர்களும் இறுதி மரியாதை செலுத்தச் சவப்பெட்டியைத் திறந்து வைத்துள்ளனர். அவரது அனைத்து உடைமைகளையும் எறித்து விட்டனர்.

24 ஆம் நாள் அவரை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஒருநாள் முன்பு சவப்பெட்டியில் இருந்த சவம் காணாமற் போனதால் மூதாட்டியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் தேடிய போது, மூதாட்டி சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார். அவரைக் கண்டுபிடித்த போது அவர் கூறியது:

“நீண்ட நேரம் உறங்கிவிட்டேன். எழுந்த பிறகு மிகவும் பசியாக இருந்ததால் சமைக்க முற்பட்டேன். சவப்பெட்டியின் மூடியை வெகுநேரம் போராடி திறந்து வெளி வந்தேன்”

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator