• July 27, 2024

“மணலில் தொலைந்து போன நகரங்கள்..!”- ஓர் அலசல்…

 “மணலில் தொலைந்து போன நகரங்கள்..!”- ஓர் அலசல்…

lost cities

மனிதன் இந்த உலகில் தோன்றிய காலம் தொட்டே இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றம், போர்கள் போன்றவற்றின் காரணத்தால் பல நகரங்கள் அழிந்து உள்ளது. அந்த வகையில் காலத்தின் கோரப் பிடியில் சிக்கி மணலில் புதைந்து கிடக்கும் நகரங்கள் பற்றி பார்க்கலாம். 

பட்டடக்கல் என்ற ஊரானது கர்நாடகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம். இங்கு பழமையான கோயில்கள் நிறைந்துள்ளது. மேலும் இங்குள்ள கோயில்கள் திராவிட மற்றும் ஆரிய இனங்களின் கட்டிடக்கலையில் உருவாக்கி உள்ளது.

lost cities
lost cities

தமிழ்நாட்டில் இருக்கும் பண்டைய நகரமான காவேரிப்பட்டினம் தற்போது பூம்புகார் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் சோழ மன்னர்களின் தலைநகரமான இருந்த பூம்புகார்  கிபி 500 இல் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமியின் தாக்குதலால் முற்றிலும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது என்ற உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது போலவே கேரளாவில் இருக்கும் முசிரிஸ் என்ற துறைமுக நகரானது மலபார் கடற்கரையில் இருந்துள்ளது. கிமு ஒண்ணாம் நூற்றாண்டை சேர்ந்த இது ஏமன், எகிப்து, ரோமன் போன்ற நாடுகளை சேர்ந்தோர் வியாபாரம் நிமித்தமாக வந்து சென்று இருக்கலாம் என்று  தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் இங்கு நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்த நகரமானது 13 ஆம் நூற்றாண்டில் நிலநடுக்கத்தால் அழிக்கப்பட்டு விட்டது.

Muziris
Muziris

மேலும் குஜராத்தில் இருக்கும் லோதல் என்ற இடத்தில் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து  மிக முக்கியமான தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லோக்கல் உலகின் ஆரம்ப கால கப்பல் துறையில் சிறப்புற்று விளங்கி உள்ளது. இது 1954 – 55 மற்றும் 60களில் நடந்த இந்திய தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

 

இது போலவே கர்நாடகாவில் இருக்கும் ஹம்பி யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் கிரானைட் பாறைகள் அதிகளவு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. 300க்கும் மேற்பட்ட கல் கட்டமைப்புகள் மற்றும் 800 ஆண்டுகளுக்கும் முந்தைய கோயில்கள், சந்தைகள், அரண்மனைகள் இங்கு உள்ளது.

விஜயநகர பேரரசின் தலைநகராக இந்த ஹம்பி திகழ்ந்துள்ளது. 16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட டெக்கான் முஸ்லிம் பேரரசின் ஆக்கிரமிப்பால் கடும் அழிவுக்கு உள்ளானது. இந்த நகரை மீண்டும் புதுப்பித்து எந்த அரசாலும் நிறுவ முடியவில்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இன்னும் இது போன்ற பல நகரங்கள் நம்மை அறியாமலேயே மண்ணோடு மண்ணாகிய நிலை வரலாறுகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.