ஆங்கிலேயர்களால் புகழ் பெற்ற மலைப்பிரதேசங்கள் என்னென்ன தெரிந்து கொள்ளலாமா?
கோடை காலம் என்றாலே அனைவரும் மலை பிரதேசங்களை விரும்பி அவற்றுக்கு சென்று வருவார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் நமது தட்ப வெப்பநிலை தாங்காமல், நம் நாட்டிலேயே இருக்கும் மலை பிரதேசங்களை நாடி சென்றார்கள். அந்த வகையில் அவர்களால் புகழ் அடைந்த மலைப்பிரதேசங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கடுமையான போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு சரியான இடமாக டார்ஜிலிங் இருக்கும் 19 ஆம் நூற்றாண்டில் தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இங்கு செல்ல ரயில் பாதை கட்டப்பட்டது. இதனை அடுத்து இன்று கூட இந்த டார்ஜிலிங் மிக முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது.
மகாராஷ்டிராவில் இருக்கும் அழகிய மலை பகுதி தான் மாபெரான். இந்த மலை பகுதி ஆங்கிலேயர்களுக்காக உருவாக்கப்பட்டது என்று கூட கூறலாம். 1907ஆம் ஆண்டு மாபெரான் மலை ரயில் பாதை ஏற்பட்டது. இதனை அடுத்து ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் வெப்பம் தாங்காத சமயத்தில் அங்கு சென்று தான் தங்கினார்கள்.
சிம்லா பிரிட்டிஷ் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட பகுதியாகும். 1815 ஆம் ஆண்டு இந்த பகுதியை கைப்பற்றிய இவர்கள் அங்கு தேவாலயங்கள், பங்களாக்கள், பள்ளிகள் போன்றவற்றை நிறுவினார்கள்.
ஒட்டக்கால் மண்டு என்று அழைக்கப்பட்ட இந்த ஊரானது ஆங்கிலேயரின் ஆட்சிக்கு கீழ் வந்த பின் உதகமண்டலமாக மாற்றப்பட்டது. அது இன்று சுருங்கி ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நீலகிரி மலை ரயில் நிலையத்தை கட்டினார்கள்.
டேராடூன் 1816 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கைப்பற்றுவதற்கு முன்பு காருவல் என்பவர் இந்த இடத்தை ஆட்சி செய்து வந்தார். அதன் பின்னர் 1899 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இங்கு ரயில் நிலையத்தை நிறுவினார்கள். அதன் பிறகு இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தளமாக மாறியது.
இன்று இது போன்ற மலைவாழ் பகுதிகள் மிகவும் வேகமாக வளர்ந்து மக்களை கவரும் படி உள்ளது என்றால் அதற்கு முதல் காரணமாக இருந்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் கடுமையான காடுகளாக இருந்த அந்த பகுதியை சீரமைத்து முதல் முதலாக ரயில் பாதைகளை அமைத்துக் கொடுத்த தருபவர்களும் அவர்கள் தான்.