• October 3, 2024

கரிகாலன் கல்லணைக்கு பின் மறைந்திருக்கும் வரலாற்று மர்மங்கள்..!

 கரிகாலன் கல்லணைக்கு பின் மறைந்திருக்கும் வரலாற்று மர்மங்கள்..!

Karikalan

சோழ அரசர்களிலேயே மிகவும் முக்கியமான மன்னராக கருதப்படுபவர் தான் இந்த கரிகால சோழன். இவர் இளஞ்சி சென்னி என்பவருக்கு மகனாக பிறந்தவர்.

இவர் தன்னுடைய சாம்ராஜ்யத்தை காஞ்சி முதல் காவிரி வரை விரிவடைய செய்ய காரணமாக இருந்தவர். இவருடைய புகழ் சங்க கால சோழர்களிலேயே மிக நல்ல நிலையில் இருந்தது என்று கூறலாம்.

Karikalan
Karikalan

இளம் வயதில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இவருடைய கால் கரிந்து விட்டது. எனவே தான் இவரை கரிகாலன் என்று அனைவரும் அழைத்திருக்கிறார்கள். மேலும் கரிகாலனுக்கு திருமாவளவன், பெருவளத்தான் என்ற வேறு சில பெயர்களும் வழக்கத்தில் இருந்தது.

மேலும் வட நாட்டில் இருந்து படை எடுத்து வந்த வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி கொண்டவர் என்று சிலப்பதிகாரம் கூறியுள்ளது.

எனவே கரிகால் சோழன் இமயம் வரை சென்று வச்சிரம்,மகதம், அவந்தி போன்ற நாடுகளை வென்றவர். அதுமட்டுமல்லாமல் இமயத்தில் புலிக்கொடியை நட்ட பெருமை கரிகாலனுக்கு உண்டு.

வடக்கு மட்டுமல்லாமல், தீவு நாடான இலங்கைக்கும் படை எடுத்துச் சென்று அங்கேயும் புலி கொடியை நாட்டினான். இதனை அடுத்து இவரது புகழ் உலகம் எங்கும் பரவியது. இலங்கையில் போர் தொடுத்து இலங்கையை வென்ற பின் அங்கிருந்து 12000 சிங்கள வீரர்களை கைதிகளாக பிடித்து வந்து கல்லணை கட்டும் பணியில் ஈடுபடுத்தினான்.

Karikalan
Karikalan

பொறியியல் வளர்ச்சி அடையாத காலகட்டத்திலே பழமையான முறையில் காவிரியில் கல்லணை கட்டினான். கற்களைக் கொண்டு இந்த கல்லணை எழுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்லணை சுமார் 180 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்டதாக கொண்டதாக இருக்கக்கூடிய இந்த கல்லணை கரிகாலனின் பொறியியல் திறனை இன்று வரை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

வெள்ளையனே ஆச்சரியப்பட கூடிய அளவில் அவரது கட்டுமானம் இருந்துள்ளது. வெறும் களிமண், கல்லை வைத்து இப்படி செய்ய முடியுமா? என்று அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்.

விவசாயத்திற்காக சிறந்த நீர் மேலாண்மை அன்றே கண்டுபிடித்த தமிழன் கல்லணை கட்டி அதை சரிவர செயல்படுத்திய பெருமை கொண்டவர். இன்றும் உறுதியோடு நிற்கும் கல்லணையை பார்க்கும் போது தமிழன் என்று பெருமிதமாக நாம் சொல்லிக் கொள்ளலாம்.