• July 27, 2024

இந்தியாவில் இருக்கும் மர்மமான கோவில்கள் என்னென்ன தெரியுமா?

 இந்தியாவில் இருக்கும் மர்மமான கோவில்கள் என்னென்ன தெரியுமா?

Temple

இந்து சமயத்தை அதிகமாக கொண்ட இந்தியாவில் இருக்கும் கோயில்களில் சில கோயில்களில் மர்மங்கள் புதைந்து உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. 

அந்த மர்மங்கள் நிறைந்த கோவில்கள் என்னென்ன அவை எங்கு உள்ளது என்று இந்த கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் மதுரையின் மையப் பகுதியில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒரு மர்மமான கோவிலாக கூறி வருகிறார்கள். கோயில் வளாகத்தில் நுழைந்தாலே தெய்வீகத் தன்மை இருக்கும். எனினும் இந்த ஆலயத்தில் தான் மர்மம் புதைந்துள்ளது என்று ஒரு ஒரு சில ஆட்கள் கூறி வருகிறார்கள்.

Temple
Temple

நிலாச்சல் மலை மீது அமைந்துள்ள 51 சித்த பீடங்களில் ஒன்றாக திகழும் காமாக்ய கோவில் கௌஹாத்தியில் உள்ளது. இந்தக் கோயிலும் மர்ம கோயில்களின் வரிசையில் வருகிறது.

கேரளாவில் இருக்கின்ற பத்மநாத சுவாமி கோயிலைப் பற்றி தெரியாதவர்களில் இருக்க மாட்டார்கள். இந்த கோயிலின் நிலவரையில் பல்லாயிரக்கணக்கான புதையல்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அண்மையில் அங்கிருந்த நிலவரை கதவுகள் திறக்கப்பட்ட போதும் கடைசியாக ஒரு கதவு மட்டும் திறக்கப்படாமல் உள்ளது. இந்தக் கோயிலுக்குள் இருக்கும் மர்மம் என்ன என்று இது வரை எவருக்கும் தெரியாது. 

1007 ஆம் ஆண்டு ராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் மர்மம் நிறைந்த கோயிலாக கருதப்படுகிறது. மேலும் இந்த கோயிலில் இருக்கும் 80 டன் எடையுள்ள ஒரே கிரானைட் கல் அதன் உச்சி பகுதியில் உள்ளது. இந்த பெரிய கல்லை எப்படி கொண்டு சென்றார்கள் என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.

Temple
Temple

ஆந்திராவில் இருக்கும் லேபாஷி கோயில் ஆனது சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திரர்க்கு ஒரே கோயிலாக திகழ்கிறது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள 70 தூண்களில், ஒரு தூண் மட்டும் தரை தொடாமல் அந்தரத்தில் தொங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மர்மம் என்ன என்பதை இன்று வரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒடிசாவில் இருக்கும் பூரி ஜெகநாதர் கோயிலும் மர்மம் நிறைந்த கோயில்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. இதற்குக் காரணம் ஸ்ரீ கிருஷ்ணரின் இதயம் இந்தக் கோயிலில் உள்ளதாக கூறப்படுவது தான். இது உண்மையா? என்ன என்று இதுவரை தெரியவில்லை.