
marmaid
நெடுங்காலமாகவே கடற்கன்னி பற்றி பல்வேறு விதமான விஷயங்கள் பரவி வருகிறது. ஆனால் இந்த கடல் கன்னிகள் உண்மையில் இருக்கிறார்களா என்றால் அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.
எனினும் பலரது நம்பிக்கைகள் காரணமாக கடல் கன்னி பற்றிய கதைகள் சமுதாயத்தில் பல்கிப் பெருகி உள்ளது. மேலும் சில சமயங்களில் இந்த கடற்கன்னியை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அதற்காக அவர்கள் பூஜையும் செய்கிறார்கள்.

இந்த கடற்கன்னிகளின் உருவ அமைப்பு தான் அதிசயிக்கத்தக்கப்படி உள்ளது. உடலின் மேல் பகுதி ஒரு பெண்ணை போலவும் மற்ற பகுதி மீனைப் போலவும் இருக்கும். மேலும் இந்த கடல் கன்னிகள் ஆழமான கடல்களில் வாழ்வதாக நம்பப்படுகிறது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowஆரம்ப நாட்களில் இந்த கடல் கன்னி பற்றிய கருத்தை வெளியிட்டவர் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் தான். 1493 ஆம் ஆண்டு கடல்வழி பயணத்தை மேற்கொண்டு இருந்த போது கரீபியன் தீவுகளுக்கு இடையே கடல் கன்னிகளை பார்த்ததாக இவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்த கடல் கன்னிகள் நீங்கள் நினைக்கும் மாதிரி அழகான தோற்றத்தோடு அல்ல அவலட்சணமாக இருப்பதாக அவர் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அது கப்பலை கடலுக்குள் சாய்த்து விடும் தன்மை கொண்டது என்ற அதிர்ச்சி தகவலையும் கூறி இருக்கிறார்.
மேலும் 1608 ஆம் ஆண்டு ஐரோப்பாவைச் சேர்ந்த ஹென்றி ஹட்சன் என்பவர். கடல் பயணத்தின் போது கடல் கன்னியை பார்த்ததாகவும், அந்த கடல் கன்னி அவரை பல கடற்கன்னிகள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் மீண்டும் அந்த பகுதிக்கு இவர் தனியாக சென்றபோது அங்கு கடற்கன்னிகள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த கடற்கன்னிகள் பற்றிய நம்பிக்கை இந்தியா, அமெரிக்கா, கிரீஸ், சைனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிக அளவு காணப்படுகிறது. குறிப்பாக ஜப்பான் மக்களின் நம்பிக்கை படி கடல் கன்னிகளுக்கு மரணம் இல்லை என்று கூறுகிறார்கள்.
கடல் கன்னிகளில் பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் இருக்கிறார்கள். கடல்கன்னிகள் வேட்டையாடி வரும் உணவுகளை அவர்கள் சாப்பிட்டு வருவதாக சிலர் கூறுகிறார்கள். அறிவியலின் கூற்றுப்படி கடற்கன்னி இருந்ததற்கான எந்த விதமான தடயங்களும் இதுவரை கிடைத்ததில்லை.
எனினும் நமது கற்பனை ஒரு காலத்தில் நிஜமாகலாம். வருங்காலங்களில் கடற்கன்னிகள் இருப்பது கூட நிரூபிக்கப்படலாம். எனவே அந்த காலம் வரை நாம் அதற்காக காத்திருப்போம்.
S ஒரு மீனவர் தன் பயணத்தின் போது கடல் கன்னியை பார்த்ததாக சொல்லி இருக்கிறார் அந்த கடல் கன்னியை புகைப்படம் எடுத்ததாகவும் அது இன்னும் அவர்கள் வீட்டில் பொக்கிஷமா வைத்திருப்பதாகவும் சமீபத்திய ஒரு பேட்டியில் நான் பார்த்து இருக்கிறேன். நான் அந்த link -ஐ தங்களுக்கு telegram ல் அனுப்புகிறேன். அது உண்மையா என்று சொல்லுங்கள். நன்றி