Skip to content
March 29, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சுவாரசிய தகவல்கள்
  • உலகத்தில் மனிதனின் கால் பதியாத இடம் எது?
  • சுவாரசிய தகவல்கள்

உலகத்தில் மனிதனின் கால் பதியாத இடம் எது?

Deepan November 10, 2021 1 minute read
challenger-deep
248

மனிதன் நிலவுக்குப் போகிறான். செவ்வாய் கிரகத்துக்குக் கூட போகப்போகிறான். இப்படி பூமியை விட்டு பல லட்சம், பல கோடி கி.மீ. தொலைவில் உள்ள கிரகங்களுக்கே செல்லபோகும் மனிதானால் பூமியில் உள்ள ஒரு இடத்துக்கு மட்டும் போகவே முடியாது. அப்படியே போனாலும் அங்கிருக்கும் நிலத்தில் காலடி வைக்க முடியாது. வைத்தால் கால் இருக்காது.!

அந்த இடத்தின் பெயர் ‘மரியானா ட்ரென்ச்‘. இதனை ‘சேலஞ்சர் டீப்‘ (challenger deep) என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு கடல் பகுதி. உலகின் மிக ஆழமான கடற்பகுதி இதுதான். பொதுவாக கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. என்றால், இங்கோ ஆழம் 10,902 மீட்டர். அதாவது 11 கி.மீ.க்கு கொஞ்சம் குறைவான ஆழம். நமது எவரெஸ்ட் மலையை அப்படியே தூக்கி உள்ளே போட்டால் கூட அந்த மலை கடலின் மட்டத்தில் இருந்து 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். அவ்வளவு ஆழமான பகுதி.

பொதுவாக மனிதனின் உடல் ஓரளவு அழுத்தத்தை மட்டுமே தாங்கும். நிலத்தில் வாழும் நாமும் தொடர்ந்து அழுத்தத்தை தாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். அது காற்றின் அழுத்தம். காற்று ஒரு செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ என்ற அளவில் தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருக்கிறது. நாம் பிறந்ததில் இருந்து இந்த அழுத்தத்தை தாங்கிக்கொண்டே இருப்பதால் அது நமக்கு தெரிவதில்லை. நமது உடலுக்கு இந்த அழுத்தத்தை தாங்கக்கூடிய சக்தி இருப்பதும் நமக்கு தெரியாமல் இருப்பதற்கு ஒரு காரணம்.


ஆனால் காற்றை விட நீருக்கு அழுத்தம் அதிகம். கடல் மட்டத்திலிருந்து வெறும் 10 மீட்டர் ஆழத்துக்கு சென்றாலே காற்று நம் உடல் மீது கொடுக்கும் அழுத்தத்தைவிட இரண்டு மடங்கு அழுத்தம் நீர் கொடுக்கும். அதுவே 20 மீட்டர் என்றால் 3 மடங்கும், 30 மீட்டர் ஆழத்தில் 4 மடங்கும், 4 கி.மீ. கடல் ஆழத்தில் 400 மடங்கு இருக்கும். இந்த அழுத்தத்தை உணர வேண்டும் என்றால் தரையில் நம்மை படுக்க வைத்து நம் மீது 50 சிமெண்ட் மூட்டைகளை அடுக்கினால் எப்படி இருக்குமோ! அந்தளவு அழுத்தம் கடலின் 4000 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுவிடும். இன்னும் போக வேண்டிய ஆழம் 8,000 மீட்டர் இருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்படியே போனால் 10,000 மீட்டர் ஆழத்தில் 1,100 மடங்கு அழுத்தம் இருக்கும். அப்படியென்றால் அந்த இடத்தில் மனிதனின் உடலை நீர் ஊடுருவி செல்லும். இதனால் மரணம் ஏற்படும். மேலும் கடலில் 800 மீட்டர் ஆழத்திலே இருள் சூழ்ந்து ஒன்றுமே பார்வைக்கு புலப்படாது. இங்கு விசித்திரமான பல நீர்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. இவைகளை உலகின் வேறு கடல் பகுதிகளில் பார்க்கமுடியாது. அப்படிப்பட்ட கடல் பகுதியிலும் மனிதர்கள் இருவர் சென்று வந்தனர்.

See also  "நான் சின்னஞ்சிறு மீன், ஆனா என் குரல் பெரிய பீரங்கி!" - நீருக்கடியில் இருந்து ஒரு அதிரடி அறிவிப்பு


ஜாக் பிக்கார்ட் மற்றும் லெப்டனென்ட் டான் வால்ஷ் என்பதுதான் அவர்கள் பெயர். இதில் ஜாக் பிக்கார்ட் ஒரு கடல் ஆராய்ச்சி நிபுணர். வால்ஷ் கடற்படை அதிகாரி. 1960, ஜனவரி 23-ல் ‘ட்ரீயெஸ்ட்’ என்ற நீர்மூழ்கிக் கலம் ஒன்றில் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்கள். 11,000 மீட்டர் ஆழத்தில் ஏற்படும் நீரின் அழுத்தத்தை கணக்கிட்டு அதனை தாங்கும் வண்ணம் மிக வலுவான இரும்புக் கூண்டு ஒன்றை உருவாக்கினார்கள். 59 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட இந்தக் கலத்தில் நான்கு நாட்கள் பயணம் செய்து இந்த ஆழத்தை அடைந்தார்கள். இந்தக் கூண்டில் பொருத்தப்பட்ட கனத்த கண்ணாடி சாளரம் வழியாக சக்தி மிக்க ஒளியைப் பீச்சி, அந்த வெளிச்சத்தில் நிலத்தைப் பார்த்தனர். இந்தப் பகுதியைப் பார்ப்பதற்கே இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் ‘டைட்டானிக்’ பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த ஆழ்கடல் பகுதியில் சில குறிப்பிட்ட ஆழம் வரை பயணித்திருக்கிறார்.

எந்த மனிதனும் எப்படிப்பட்ட பாதுகாப்பு உடை அணிந்தும் இந்த மர்ம பிரதேசத்தில் காலடி பதிக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை.

About the Author

Deepan

Administrator

Script writer, Video Editor & Tamil Content Creator

Visit Website View All Posts
Tags: challenger deep

Post navigation

Previous: ஒரே ஒரு காரில் மட்டும் மழை பெய்த அதிசயம் !!!
Next: ரெட் அலெர்ட் விலக்கப்பட்டது !!! கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம் !!!

Related Stories

fg
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025
mu
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்!

Vishnu July 29, 2025
gf
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா?

Vishnu July 29, 2025

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.