• October 3, 2024

ஒரே ஒரு காரில் மட்டும் மழை பெய்த அதிசயம் !!!

 ஒரே ஒரு காரில் மட்டும் மழை பெய்த அதிசயம் !!!

இந்தோனேசியாவின் வெஸ்ட் ஜாவா எனும் பகுதியில் நவம்பர் 1ஆம் தேதி குறிப்பிட்ட காரில் மட்டும் மழை பெய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த அதிசய வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு என்பதை செய்திகளில் நாம் கேட்டிருப்போம், ஆனால் குறிப்பிட்ட காரில் மட்டும் மழை பெய்கிறது என்ற செய்தி நம்மை சற்று வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த வீடியோவை ஓரியான்ரியானா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதவு செய்திருந்த வீடியோவில்,” நான் முதலில் யாரோ அந்த கார் மீது தண்ணீரை ஊற்றுகிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் அருகில் சென்று பார்க்கும் போது தான் வானத்திலிருந்து அந்த காரில் மட்டும் தண்ணீர் கொட்டுவது எனக்கு தெரிந்தது. இது ஒரு அதிசயமான நிகழ்வு.” என பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு ஹோட்டலில் கார் பார்க்கிங்கில் நிறைய கார்கள் நின்றுகொண்டிருக்கிறது. அதில் ஒரு குறிப்பிட்ட கருப்பு காரின் மீது மட்டும் சடசடவென மழை பெய்கிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் தங்களது சுவாரசியமான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

கருமேகங்கள் கூடி இருக்கும் இடங்களில் மழை பெய்யும் என நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் ஒரு காரின் பரப்பளவு அளவு மட்டுமே மழை பெய்வது இயற்கை நிகழ்த்திய மாபெரும் அதிசயம் என்றே பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ ஒரு உண்மையான வீடியோ அல்ல தவறான செய்தியை பரப்பாதீர்கள் என்றும் ஒரு தரப்பினர் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த வீடியோவை உற்றுப் பார்க்கும்போது வானத்திலிருந்து மழைநீர் பொழிவது போல தான் தெரிகிறது. ஓரியான்ரியானா பகிர்ந்துள்ள இந்த அதிசய வீடியோ அடங்கிய இன்ஸ்டாகிராம் பதிவை கீழே காணுங்கள்.

View this post on Instagram

A post shared by Uryan Riana (@uryanriana)

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.