• October 5, 2024

மாட்டுக் கொம்பில் QR code – வைரலாகும் வீடியோ !!!

 மாட்டுக் கொம்பில் QR code – வைரலாகும் வீடியோ !!!

இந்தியாவில் மாடுகளை வைத்து ஜக்கம்மா குறி சொல்கிறாள் எனக்கூறி காணிக்கை வாங்கி செல்லும் மாட்டுக்காரர்கள் இருப்பது வழக்கமே. ஆனால் இவ்வாறு காணிக்கை வாங்குவதற்கு UPI payment முறையை பயன்படுத்திய ஒரு நவீன கால மாட்டுக்காரரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிஜிட்டல் இந்தியா திட்டம் நாடெங்கும் உள்ள சிறு சிறு கிராமங்களில் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கையில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவரும் தங்களது மொபைல் நம்பர் உடன் வங்கிக் கணக்கை இணைத்து UPI மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். பெரிய பெரிய showroom-களில் இருந்து சிறு குறு தொழிலாளிகள் வரை இந்த UPI முறையை பயன்படுத்தி வருகின்றனர்.

Digital India Mission : Objectives, Funding, Progress Card - The Indian Wire

ஆனால் மாட்டின் இரு கொம்புகளுக்கு நடுவில் UPI QR code-ஐ தொங்கவிட்டு அதன் மூலம் காணிக்கை பெறும் மாட்டுக்காரரின் இந்த வீடியோ டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த வீடியோவை இந்தியாவின் முக்கியத் தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு, “டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை இந்தியாவில் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையா?.”, என caption கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ லட்சக்கணக்கான நெட்டிசன்களால் பார்க்கப்படும் பகிரப்பட்டும் வருகிறது. ட்விட்டரில் உள்ள நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு தங்களது சுவாரசியமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களைத் தாண்டி விலங்குகள் வரை வியாபாரத்திற்கு வந்துள்ளது என பலரும் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வளர்ச்சியை இந்த வீடியோவை பார்க்கும் போது நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.