• October 6, 2024

அதிக இளநீர் குடிப்பதால் இவையெல்லாம் ஏற்படுமா? அடடா இத்தனை நாள் தெரியவில்லையே..

 அதிக இளநீர் குடிப்பதால் இவையெல்லாம் ஏற்படுமா? அடடா இத்தனை நாள் தெரியவில்லையே..

Tender coconut

பொதுவாகவே இளநீர் அருந்துவது மிகவும் சிறப்பானதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இளநீருக்கு திசுக்களை அதிகளவு வளர்க்கக்கூடிய தன்மை இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இளநீர் குடிப்பது மிகவும் சிறப்பானது என்று கூறுவார்கள்.

மேலும் உங்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இயற்கை பானமான இளநீரை குடிப்பதால் உடலுக்குள் எந்த வித தீமையும் ஏற்படாமல் நன்மை பயக்கும் உடலும் குளிமையாகும்.

Tender coconut
Tender coconut

எனினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட அளவே  இளநீரை குடிக்கும் போது பலவிதமான பாதிப்புகள் உடலுக்கு ஏற்படுகிறது. அப்படி என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு இளநீருக்கும் மேல் அதிகமாக குடிக்கும் போது உங்கள் உடல்களில் laxatic விளைவு ஏற்படும். அது மட்டுமல்லாமல் ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

தண்ணீருக்கு பதிலாக திரவ நிலையில் இருக்கக்கூடிய இளநீரை குடிப்பதால் உடலில் நீர் சத்தை ஈடுகட்ட முடியாது. மேலும் இதன் மூலம் நீர் இழப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

Tender coconut
Tender coconut

ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் அவ்வளவு உதிதமான பானமல்ல. இந்த இளநீரை குடிப்பதால் மேலும் அவர்கள் உடலில் அலர்ஜி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக சிலருக்கு எரிச்சல், சொறிச்சல் போன்றவை ஏற்படும்.

அதிகளவு இளநீரை குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் அமிலத்தன்மை பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளதால் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Tender coconut
Tender coconut

மேலும் அதிக அளவு இளநீர் குடிப்பதன் மூலம் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. உங்கள் சிறுநீரகத்தில் கல் இருக்கக்கூடிய பட்சத்தில் நீங்கள் இளநீர் குடிப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

பழைய நாள்பட்ட இளநீருகளில் பூஜ்சைகளின் தொற்று அதிகளவு காணப்படும். எனவே அவற்றை குடிப்பதை விடுதல் அவசியம்.