• July 27, 2024

“விவாகரத்து” தம்பதிகள் மத்தியில் தவிர்க்க முடியாத வார்த்தை..!” –  இந்தியாவிற்கான இடம் என்ன?

 “விவாகரத்து” தம்பதிகள் மத்தியில் தவிர்க்க முடியாத வார்த்தை..!” –  இந்தியாவிற்கான இடம் என்ன?

Divorce

வாழையடி, வாழையாக குடும்பம் செழித்து விளங்க வேண்டும் என்பதற்கு திருமணம் என்ற ஒரு அற்புதமான நிகழ்வு, ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைகிறது.

ஆயிரம் காலத்து பயிரான இந்த திருமணத்தை ஆயிரம் பொய்கள் சொல்லியாவது செய்யலாம் என்று கூறப்பட்ட நிலையில், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் போன்ற வார்த்தைகள் மனிதர்களுக்கு திருமணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவது போல உள்ளது.

இது போல வாழ்க்கையில் திருமணம் செய்தவர்களில் சிலர் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தோல்வியை நோக்கி நகரக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகைகள் அவர்கள் விவாகரத்தை நாடி செல்கிறார்கள்.

Divorce
Divorce

இந்தியாவைப் பொறுத்தவரை பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணங்கள் மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக காதலித்துக் கொண்டவர்களும் திருமணம் செய்து கொண்டு வாழும் போது ஏற்படக்கூடிய இடர்களை சமாளிக்க முடியாமல் விவாகரத்தை நோக்கி பயணிப்பது அனைவரும் அறிந்த சோகமான விஷயம் தான்.

எனவே இன்றைய சமுதாயத்தில் திருமண வாழ்க்கை கசந்த பிறகு, சாதாரண மனிதராக இருந்தாலும் சரி, படு பிரபலமான நபராக இருந்தாலும் விவாகரத்து செய்து கொள்வதை நாம் பார்க்கலாம்.

சம்பிரதாயங்களை கட்டிக் காப்பாற்றும் இந்தியாவிலும் தற்போது விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. மேலும் விவாகரத்து என்பது தற்போது உலகளாவிய ஒரு கலாச்சாரமாக உருவெடுத்து விட்டது என்று கூறலாம்.

இந்த சூழ்நிலையில் உலகில் அதிக அளவு குறிப்பாக அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நாலு முதல் ஐந்து மில்லியன் மக்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த திருமணத்தில் பாதி அளவு விவாகரத்தில் முடிகிறது என்ற அதிர்ச்சி கலந்த உண்மை தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

Divorce
Divorce

அந்த வகையில் இந்த கட்டுரையில் விவாகரத்தை சந்திக்கக்கூடிய பல நாடுகளைப் பற்றி விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

குறைந்த அளவு விவாகரத்து விகிதங்களைக் கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது நம் நாடு தான். எனவே நீங்கள் சற்று நிம்மதியாக இருங்கள். இந்தியாவில் சுமார் ஒரு சதவீத விவாகரத்து மட்டுமே காணப்படுவதாகவும், எனவே உலகிலேயே விவாகரத்து குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து இரண்டாம் இடத்தில் வியட்நாம் உள்ளது. இந்த நாட்டில் ஏழு சத திருமணங்கள் தான் தோல்வியில் முடிந்து விவாகரத்தில் முடிவதாக கருத்துக்கணிப்பு தெரிந்துள்ளது.

மேலும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் நாடு தஜிகிஸ்தான். இங்கு 10 சதவீதம் மட்டுமே விவாகரத்துக்கள் நடக்கிறது.

நான்காவது இடத்தை பிடித்திருக்கும் ஈரானில் 14 சதவீதம் விவாகரத்து ரேட்டிங் காணப்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது.

Divorce
Divorce

இதனை அடுத்து ஐந்தாம் இடத்தை மெக்சிகோ நாடு பிடித்துள்ளது. இந்த நாட்டின் விவாகரத்து சதவீதமானது 17 சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது இடத்தில் இருக்க கூடிய இரண்டு நாடுகள் எகிப்து மற்றும் தென்னாபிரிக்க நாடாகும். இங்கும் விவாகரத்து 17 சதம் ஆக உள்ளது.

எகிப்து மற்றும் தென்னாப்பிரிக்காவை அடுத்து ஏழாவது இடத்திற்கு வந்திருக்கும் நாடு பிரேசில். இங்கு விவாகரத்து விகிதமானது 21 சதவீதமாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் துருக்கி நாளானது 25 சதவீத விவாகரத்து விகிதத்தோடு எட்டாவது இடத்தை எட்டி பிடித்துள்ளது.

ஒன்பதாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள கொலம்பியா நாட்டில் 30 சதவீத விவாகரத்துக்கள் நடைபெறுகிறது. இது தான் அதிக அளவு விவாகரத்து சதவீதம் கொண்ட நாடாக உள்ளது.