• July 27, 2024

கெய்ரோவிற்கு அருகில் 4500 ஆண்டுகள் பழமையான மம்மி கால்கள் கண்டுபிடிப்பு!

 கெய்ரோவிற்கு அருகில் 4500 ஆண்டுகள் பழமையான மம்மி கால்கள் கண்டுபிடிப்பு!

mummy feet

எகிப்து என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிரமிடுகள் தான். அந்த காலத்தில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத போது இவ்வளவு பெரிய கட்டிடங்களை அவர்கள் எப்படி எழுப்பி இருப்பார்கள் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

இதனை அடுத்து பிரமிடுகளின் பற்றிய ஆய்வுகள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்க கூடிய வேளையில் சமீபத்தில் எகிப்தில் இருக்கக்கூடிய ஒரு பகுதியில் பழங்கால மம்மியின் பாதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சக்காரா என்பது எகிப்து நாட்டின் ஹெய்ரோவிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு பழங்கால நெக்ரோபோலிஸ் ஆகும். இந்த பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்து வந்த மக்களின் வரலாற்றுக் கல்லறைகள் மற்றும் புதைக்குழிகள் ஏராளமாக காணப்படுகிறது.

அந்த வரிசையில் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மியின் பாதங்கள் சக்காராவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மம்மியின் பாதம் ஆனது அறிய தொல்பொருள் பொக்கிஷமாக பேசப்படுவதோடு இந்தப் பாதங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் புதைக்குழி அல்லது கல்லறை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் மம்மிஃபிகேஷன் செய்யப்பட்ட இந்த மம்மியின் உடல் உறுப்புகள் கெடாமல் இருப்பதற்காகத்தான் இந்த மம்மிபிகேஷன் செய்யப்படுகிறது. பண்டைய மம்மிகள் பற்றிய ஆய்வுகளின் மூலம் அந்த மம்மிகளின் வயது, உடல்நலம் மற்றும் அது சம்பந்தமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

இந்த மம்மியின் கால்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் தொடர்ந்து அகழ்வாய்வுகள் தொல்பொருள் துறை சார்பாக நடைபெற்றுக் கொண்டு வருவதால் பண்டைய எகிப்திய நாகரீகம் மற்றும் மனித வரலாற்றை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

அண்மைக் காலமாக தொல்பொருள் துறையில் எண்ணற்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் ஆக்கிரமிப்பு அல்லாத இமேஜிங் மற்றும் டிஎன்ஏ பகுப்பாய்வு போன்றவை தொல்பொருள் தொழில்நுட்பங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.

இதனை அடுத்து ஆய்வுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் இந்த மம்மியின் பாதம் பற்றிய மர்மம் விரைவில் தெரியவரும்.


1 Comment

  • அருமையான பதிவு ❤️

Comments are closed.