• July 27, 2024

 “அணு ஆயுதங்கள் இருந்தால் வேற்று கிரகவாசிகள் மோப்பம் பிடித்து வருவார்களாம்..!” – UFO ஆராய்ச்சியாளர் சபீர் உசேன் பேச்சு..

  “அணு ஆயுதங்கள் இருந்தால் வேற்று கிரகவாசிகள் மோப்பம் பிடித்து வருவார்களாம்..!” – UFO ஆராய்ச்சியாளர் சபீர் உசேன் பேச்சு..

Flying Saucer

பறக்கும் தட்டுகளைப் பற்றி ஆய்வுகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் யூஎஃப்ஓ (UFO) ஆராய்ச்சியாளர் சபீர் உசேன் சமீபத்தில் பேசிய பேச்சு பலரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் தள்ளிவிட்டது என்று கூறலாம்.

பறக்கும் தட்டுகள் பற்றி கூறுகையில் இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாகவே அதாவது 1940 களுக்கு முன்பிருந்தே இந்த பறக்கும் தட்டுகள் பூமியை நோக்கி வருவதும், செல்வதுமாக உள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல்களை கூறி இருக்கிறார்.

Flying Saucer
Flying Saucer

அது மட்டுமல்லாமல் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடிய பகுதிகளை குறி வைத்து அவை வந்து செல்வதாகவும் ஏற்கனவே அமெரிக்காவில் நியூயார்க்கில் உலகில் முதல் அணுகுண்டை செய்தபோது அந்தப் பகுதியை நோக்கி பறக்கும் தட்டுகள் வந்ததாக கூறியிருக்கிறார்கள்.

அதுபோலவே தற்போது சென்னையில் பறக்கும் தட்டுகள் வந்து சென்றிருக்கக் கூடிய பகுதியை நீங்கள் சற்று கூர்மையாக கவனித்து பாருங்கள். இந்த பகுதியிலிருந்து அணு மின் நிலையம் அமைந்திருக்கும் கல்பாக்கம் பகுதி மிக அருகில் தான் உள்ளது.

கடந்த 26 ஆம் தேதி சென்னையை அடுத்த முட்டுக்காட்டு கடல் பகுதியில் 4 பறக்கும் தட்டுகள் பறந்ததை ஓய்வு பெற்ற சிபிசிஐடி போலீஸ் டிஜிபி பிரதீப் தனது செல்போனில் படம்பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Flying Saucer
Flying Saucer

ஐ போனில் படம் பிடிக்கப்பட்ட இந்த பறக்கும் தட்டு புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தபோது, நான்கு பறக்கும் தட்டுகள் உள்ளது போன்று தெரியவந்துள்ளது. செவி வழியாக மட்டுமே பறக்கும் தட்டுகள் பற்றிய விஷயங்களை தெரிந்து கொண்டால் நாம் தற்போது தான் புகைப்படமாக இதை பார்த்திருக்கிறோம்.

மனிதன் இருக்கக் கூடிய பட்சத்தில் அவன் உடல் வெப்பநிலையை கணக்கிட கூடிய இன்ஃப்ரா ரெட் கருவியின் மூலம் நமது கண்களுக்கு தெரியாத உருவங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். இது போன்ற கருவிகளை பயன்படுத்தி தான் அமெரிக்க உளவு நிறுவனமானது இந்த பறக்கும் தட்டுகள் வந்து செல்வதை உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து நோட்டமிடக்கூடிய இந்த வேற்று கிரகவாசிகள் என்று அழைக்கப்படக்கூடிய ஏலியன்சை அமெரிக்கர்களால் நெருங்க முடியவில்லை. ஏலியன் வந்து செல்லக்கூடிய பறக்கும் தட்டை துரத்திச் சென்றாலும் அவர்களை இது வரை அமெரிக்க ராணுவத்தால் பிடிக்க முடியவில்லை.

வேற்று கிரகவாசிக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவானது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறியிருக்கிறார். வேற்று கிரக வாசிகளுக்கும் பூமிக்கும் இடையே உள்ள உறவு பல கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை விளக்கினார்.

Flying Saucer
Flying Saucer

உலகப்போரில் தான் அணு ஆயுதம் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இதனை அடுத்து வேற்று கிரகவாசிகளின் பார்வை மனிதர்களின் பக்கம் திரும்பியதால் தான் பூமியை நோக்கி அதிக அளவு படை எடுத்து இருப்பதாக கூறினார்.

அது அல்லாமல் இந்தியாவில் அணு ஆயுதங்கள் எங்கெங்கு உள்ளதோ, அந்த பகுதி பற்றியும் பாகிஸ்தானில் அணு ஆயுதம் இருக்கக் கூடிய பகுதிகள் பற்றியும், இந்த வேற்று கிரகவாசிகளுக்கு நன்கு தெரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்து இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் காலங்களில் தமிழக அரசு பறக்கும் தட்டு பற்றிய ஆய்வுகளை ஊக்கப்படுத்துவதோடு பொதுமக்களுக்கு அது நிமித்தமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.