“கருந்துளையில் ஏற்படும் அதிர்வு..!” – ஓம் எனும் பிரணவமா? நாசா அதிரடி ரிப்போர்ட்..
பால்வெளி மண்டலத்தின் மையத்தில் ஒரு மிகப்பெரிய கருந்துளை ஒன்று உள்ளது. இந்த ஒரு இருண்ட மையத்தை சுற்றி சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் தெளிவற்ற ஒளிரும் அமைப்புக்கள் காணப்படுகிறது.
கருந்துளை என்பது ஒரு மிகப்பெரிய அண்டவெளியில் சக்தி வாய்ந்த கண்ணுக்குத் தெரியாத வெற்றிடம் எனக் கூறலாம். இந்த கருந்துளையில் அதிகளவு ஈர்ப்பு விசை இருக்கும். இதனை கடந்து செல்லும் எந்த ஒரு ஒளியாக இருந்தாலும் அதை தனக்குள் ஈர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய அளவு தன்மையோடு கருந்துளை இருக்கும்.
மேலும் இந்த கருந்துளையில் உள்ளே சென்ற ஒளி கூட வெளியே வர முடியாத அளவிற்கு அதிக சக்தியோடு திகழக்கூடிய இந்த கருந்துளையில் ஏற்படுகின்ற அதிர்வுகள் பற்றிய ஆச்சரியமான தகவலை நாசா வெளியிட்டு இருப்பது மேலும் நம்மை ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது.
சூரியனை விட 40 லட்சம் மடங்கு பெரிதாக இருக்கும் கருந்துளை பால்வெளி அண்டத்தில் உள்ளது. இந்த கருந்துளையைப் பற்றி விமர்சனம் செய்யும் போது, அதன் அருகில் இருக்கும் பொருட்களை வைத்தே வரையறுத்து இருக்கிறார்கள். ஏனெனில் எவரும் இதுவரை கருந்துளைக்குள் சென்றதில்லை.
1967 ஆம் ஆண்டு அமெரிக்க வானவியல் ஆய்வாளர் ஜான் வீலர் கருந்துளை என்ற பெயரை முதல் முதலில் உருவாக்குகிறார். இதனை அடுத்து 1971 ஆம் ஆண்டு கருந்துளை கண்டறியப்பட்டது.
இந்த கருந்துளையும், மற்ற கிரகணங்களை போல சுழலும் தன்மை கொண்டுள்ளது. ஒளியின் வேகத்தில் 30 சதவீதம் வேகமாக சுழலுவது இதன் தன்மையாக இருக்கும். மேலும் பிரம்மாண்டமாக ஒளி வீசக்கூடிய நட்சத்திரமானது, ஒளியை இழந்து அதன் நிறையில் சுருங்கும் போது தான் ஒரு கருந் துளையாக மாறுகிறது.
கண்ணால் பார்க்க முடியாத கருந்துளையில் ஒளி மற்றும் தூசி காணப்படுகிறது. எனினும் இதன் நடுவில் என்ன உள்ளது என்பது இது வரை தெரியவில்லை. இந்த கருந்துளையில் ஏற்படுகின்ற அதிர்வானது இந்து மதத்தில் கூறப்பட்டிருக்கக்கூடிய பிரணவ மந்திரத்தின் ஒலியை ஒத்து இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
மேலும் இந்து மதத்தில் ஓம் என்ற பிரணவ மந்திரம் ஆனது இந்த அண்டம் முழுவதும் நிறைந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் கருந்துளையில் ஏற்படுகின்ற அதிர்வின் ஓசையானது, அதே பிரணவத்தை போல் அதாவது ஓம் என்ற ஒலியை குறிப்பது போல உள்ளது என்ற நாசாவின் கணிப்பை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.
அந்த வகையில் நமது முன்னோர்கள் விண்வெளி பற்றிய விஷயங்கள் எல்லாவற்றையும் சீரிய வழியில் கணித்திருப்பதை பார்க்கும் போது நம்மை மிரள வைக்கிறது.