• September 21, 2024

 “யார் இந்த இப்லிஷ்..!” – இஸ்லாம் என்ன சொல்கிறது..

  “யார் இந்த இப்லிஷ்..!” – இஸ்லாம் என்ன சொல்கிறது..

Iblis

இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் முகமது நபி அவர்கள் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இந்த முகமது நபியின் வாழ்க்கையில் சாத்தான்களின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

இஸ்லாம் மதத்தவரின் புனித நூலான திருக்குர்ஆனும் அதிகாரப்பூர்வமான ஹதீஸ்களும் இந்த சாத்தான் பற்றிய விவரங்களை சுவாரசியமான முறையில் தந்திருக்கிறார்கள்.

Iblis
Iblis

அந்த வகையில் இஸ்லாம் மதத்தவர்கள் இந்த சாத்தானை இப்லிஷ் என்று அழைக்கிறார்கள். சாத்தான் பற்றி சில முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகிறது. இதற்குக் காரணம் சாத்தான் என்பவன் தேவ தூதனா அல்லது தேவ தூதவனாக இருந்து பாவம் செய்து தள்ளிவிட்ட பிறகு ஜின்னாக மாறியவனா? என்பது போன்ற பல சந்தேகங்கள் உள்ளது.

மேலும் இந்த இப்லீஸ் ஜின் இனத்தை சேர்ந்தவனாக இருக்கிறான் என்று திருக்குர்ஆன் விளக்கமாக கூறியிருக்கிறது. 

உறங்கக்கூடிய மனிதர்களின் பிடரியில் இந்த சாத்தான் மூன்று முடிச்சுகளை போடுவதாகவும், இந்த மூன்று முடிச்சுகளிலிருந்து விடுபட அல்லாஹ்வை நினைத்தல், உளூச்,தொழுதல் போன்றவற்றை செய்வதின் மூலம் அந்த முடிச்சுகள் அவிழும்.

Iblis
Iblis

திருட்டுத்தனமாக ஓட்டு கேட்கும் சைத்தானை விரட்ட பிரகாசமான தீப்பந்தத்தை காட்ட வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் இந்த சைத்தான்கள் மனிதர்களை பாவத்தை செய்வதற்கு தூண்டக்கூடிய சக்தி படைத்தது என்று கூறி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு இந்த சைத்தான்கள் தான் பொறுப்பு என்று ஹதீஸ் இலக்கியம் கூறுகிறது.

நபிகளின் கூற்றுப்படி மௌனமாக இருப்பதன் மூலம் சைத்தான்களை விரட்டி அடிக்கலாம். எனவே சந்தேகம் இல்லாமல் நீங்கள் நம்புங்கள். உங்கள் நாவானது சைத்தான் கையில் சிக்கிய கயிறு தான் என்பதை.மேலும் இந்த நாவு தான் உங்களை எல்லாவிதமான சிக்கல்களிலும் சிக்க வைக்கிறது.

Iblis
Iblis

குதர்க்கம் பேசும் பழக்கமும், அதிகம் பேசும் பழக்கமும் ஒருவனுக்கு இருந்தால் அவன் சைத்தானுக்கு உதவி செய்கிறான். எனவே எல்லா பாவங்களுக்கும் காரணமாக நாவு தான் உள்ளது என அபுபக்கர் கூறியிருக்கிறார்.

எனவே யாரும் காரியமற்ற பேச்சில் ஈடுபட வேண்டாம். பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் தகுந்த முறையில் பேச வேண்டும். வார்த்தைகளை பேசுவதற்கு முன்பு யோசித்துப் பேச வேண்டும் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் கூறியிருக்கிறார்.

சைத்தான் உங்கள் உள்ளத்தில் தேவையற்ற வீண் சந்தேகங்களை உருவாக்கும். எனவே இறைவன் மீது பற்றோடு இருக்கும்போது இந்த சைத்தான்களின் வேலைகள் எடுபடாது.