• July 27, 2024

கோவிலாங்குளம் சிறப்பு என்ன? – தொல்லியல் சின்னமாக வாய்ப்புகள் உள்ளதா?

 கோவிலாங்குளம் சிறப்பு என்ன? – தொல்லியல் சின்னமாக வாய்ப்புகள் உள்ளதா?

Kovilangulam

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் தான் இந்த கோவிலாங்குளம். இந்த கோவிலாங்குளத்தில் இருக்கின்ற கோவிலில் சோழர் மற்றும் பாண்டியர்களின் வரலாற்று ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாமல் இந்த கோவிலில் சமணர் கோயில் மற்றும் பெருமாள் கோயில் அமைந்திருப்பதால் இந்த கோயிலை தொல்லியல் சின்னமாக பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.

Kovilangulam
Kovilangulam

இந்த இரண்டு கோயில்களுமே வெவ்வேறு நூற்றாண்டில் கட்டப்பட்டது. குறிப்பாக கிபி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சமணர் கோவிலும் கிபி 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட பெருமாள் கோயிலும் எங்கு உள்ளது.

கோவிலாங்க்கூர் என்று அழைக்கப்படக்கூடிய இந்த ஊர் ஆரம்ப நாட்களில் வெண்பு வளநாட்டு செங்காட்டிருக்கை குறும்பனூரான குணகணாபரண நல்லூர் என கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.

அம்பலசாமி கோவில் ஊரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கருவறையும், அத்தனை மண்டபமும், ஒரு பெரிய மேடையும் அமைந்துள்ளது. இதில் மூன்று சிற்பங்கள் காணப்படுகிறது.

மேலும் தெற்கு பகுதியில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரரும், வடக்கு பகுதியில் முக்கூடைகளின் கீழ் ஒரு தீர்த்தங்கரரும், நடுவில் சுருள் முடியுடன் ஒரு தீர்த்தகரரும் இருக்கிறார்கள். இந்த கோவிலில் பன்னிரெண்டாம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழனது மூன்று கல்வெட்டுக்கள் காணப்படுகிறது.

Kovilangulam
Kovilangulam

இந்த கல்வெட்டுகளில் முக்குடையோரான சமணர்களுக்கு என்று ஒரு திருமண மண்டபம் ,செம்பொன் திவ்ய விமானம் செய்து திருக்கோயில் அமைத்ததாக குறிப்புகள் காணப்படுகிறது.

இந்த கோயிலினை பராமரிப்பதற்காகவும் நிலங்கள் கிணறு, தண்ணீர் பந்தல் போன்றவை அமைத்ததற்கான குறிப்புகளும் உள்ளது. வேறு இரண்டு கல்வெட்டுகளில் சில ஊர் பெயர்களும், அதிகாரி பெயர்களும் காணப்படுகிறது.

இந்த ஊருக்கு அருகில் இருக்கும் குழு, தொப்பலாங்கரை, புரண்டி ஆகிய ஊர்களிலும் சமண மதத்தைச் சார்ந்த சமணப் பள்ளிகள் இருந்துள்ளது. ஆனால் இங்கு பள்ளி என்ற சொல்லில் வராத கல்வெட்டு உள்ளது தான் பலரது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kovilangulam
Kovilangulam

பெருமாள் கோயிலை பொறுத்த வரை அங்கு நான்கு கல்வெட்டுக்கள் உள்ளது. இதில் மூன்று கல்வெட்டுகள் குலசேகர பாண்டியனை பற்றி கூறுகிறது. மேலும் இந்த கல்வெட்டுகளில் கோயிலுக்கு கொடையாக பசு, 100 குழி இடம் வழங்கியதை தெரிவிக்கிறது.

இக்கோயிலானது கருங்கட்களாலும், கோயில் விமானம் பிரஸ்தரம் வரை இதே கருங் கற்களைக் கொண்டும், மேல்பகுதியானது சுதை மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இங்கிருக்கும் ஸ்தூபி சேதம் அடைந்த நிலையில் இருப்பதால் இதை பாதுகாக்க வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள்.

தொல்லியல் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷமாக இருக்கக்கூடிய இந்த கோயில் தற்போது சேதம் அடைந்து காணப்படுகிறது. சோழ, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டு மற்றும் சமண வைணவ கோயில்களை கொண்டிருக்கும் இந்த பகுதியை புணரமைத்து பாதுகாக்க வேண்டும் என்று பலரும் கூறியிருக்கிறார்கள்.