ஆதிப்பெருக்கு எனும் ஆடிப்பெருக்கு செல்வம் பெருக இத செய்யுங்க..
ஆடிப்பெருக்கு திருவிழாவானது தமிழகம் எங்கும் சிறப்பான முறையில் கொண்டாடப்படக்கூடிய பண்டிகையாக விளங்குகிறது. தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இந்துக்களின் மங்களகரமான பண்டிகையான இதனை ஆரம்ப நாட்களில் ஆதிப்பெருக்கு என்று அழைத்திருக்கிறார்கள்.
நாளை காவிரியில் 18 படிகளும் நிரம்பி நீர் பெருக்கெடுத்து ஓடும். அந்த காவிரி அன்னைக்கு நன்றியை தெரிவிக்க கூடிய வகையில் நமது முன்னோர்கள் இந்த ஆடி 18 – ஐ கொண்டாடியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஆடிப் பதினெட்டின் சிறப்பு என்ன என்பதை பற்றி பார்க்கையில் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மிக சிறப்பான ஒன்று தான் இந்த நீர். இந்த நாளில் நீரினை கொடுக்கும் கடவுள்களை வணங்குவதை மரபாகக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இயற்கை அன்னையை, அம்மனாக உருவகப்படுத்தி வழிபட்டு இருக்கிறார்கள்.
இதனை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் மனித குலத்தின் மீது இயற்கை எந்த அளவு பெரும் கருணை காட்டுகிறதோ, அந்த கருணைக்கு உரிய நன்றியை தெரிவிக்கும் நல்ல விழா தான் இது.
ஆடி மாதத்தில் தான் பருவ மழை துவங்கும் .ஆறுகளில் நீர்மட்டம் உயரும். மேலும் ஆடி மாதத்தில் விதைத்தல் மற்றும் பிற விவசாய பணிகள் நடைபெற ஆயத்தப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள்.அதனால் தான் ஆடி பட்டம் தேடிப் பார்த்து விதை என்ற பழமொழி உள்ளது.
இந்த ஆடியிலே நாம் துவங்கும் செயல்கள் குறிப்பாக விவசாய செயல்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும், விவசாயத்துக்கு தேவையான நீரினை கொடுக்கக்கூடிய காவிரி நதிக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் தான் இந்த பண்டிகை ஏற்பட்டுள்ள ஏற்பட்டது.
அது மட்டுமல்லாமல் தமிழில் 18 என்பது ஒரு எண் மட்டுமல்ல. அதற்கு வேறு பொருள்கள் உள்ளது. அந்த வகையில் 18 என்பது பெருக்கு, எழுச்சி போன்றவற்றைக் குறிக்கும். எனவே தான் ஆடி 18 காவேரி கரை புரண்டு பெருக்கெடுத்து ஓடி வரும் இந்த நிகழ்வை தமிழகத்தில் வசிக்கும் அனைத்து பெண்களும் அவர்கள் சம்பிரதாய முறைப்படி கடைப்பிடித்து வருகிறார்கள்.
மேலும் அந்த நாளில் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் சக்தியை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் 9 வகையான சாதங்களை செய்து அவற்றை அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்வார்கள். இதனை சித்தர அன்னம் என்று கூறுகிறார்கள்.
அது மட்டுமல்ல ஆற்றுக்கரை இருக்கக்கூடிய பகுதிகளுக்கு இந்த அன்னத்தை எடுத்துச் சென்று அங்கு இருக்கக்கூடிய நீர் நிலைகளில் வைத்து வழிபாடு செய்து மலர்களை நீர் நிலையில் தூவி வரும் பழக்கம் இன்றும் உள்ளது.
குடும்பம், குடும்பமாக பல விதமான சுவையான உணவுகளை செய்து கொண்டு குடும்பத்தோடு காவிரி அம்மனுக்கு படையல் இட்டு வணங்குவதை இன்றும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் மற்றும் திருமணம் ஆன பெண்கள் மங்கள பூஜையை செய்வார்கள். காப்பரிசி என்று சொல்லப்படக்கூடிய வெல்லம் மற்றும் அரிசியால் செய்யப்பட்ட இனிப்பை படைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இத்தோடு கருகுமணி மற்றும் காதோலைகளை கடவுள் முன்வைத்து கன்னிப் பெண்கள் நல்ல கணவனை பெற வேண்டி விரதம் இருந்து விரதத்தை முடிப்பார்கள்.
தமிழர்களின் சம்பிரதாயப்படி இந்த விழாவில் மருமகனை வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு புது ஆடைகளை கொடுப்பார்கள். மேலும் புதுமண தம்பதியர்களில் புதிய மஞ்சள் கயிறு மாற்றக்கூடிய நிகழ்வும் நடக்கும். இதைத்தான் தாலி பெருக்கி போடுதல் என்று கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் கணவனின் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இன்று வரை உள்ளது.
அப்படிபட்ட சிறப்புமிக்க ஆடி 18 நாளை துவிதியை திதியும் மதியம் வரை அவிட்ட நட்சத்திரமும், பிறகு சதய நட்சத்திரமும் வருகிறது. ஆடி 18 பிறப்பதால் அன்று காலை 10 முக்கால் முதல் 11 முக்கால் வரை நல்ல நேரம் உள்ளது மாலையில் நல்ல நேரம் இல்லை.
எனவே நீங்கள் கடவுளை வழிபட உகந்த நேரமாக காலை 6:00 மணி முதல் 7.30 மணி வரை எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு எமகண்டம் ஏற்படுகிறது. பகலில் ஒன்றரை முதல் மூன்று மணி வரை ராகு காலம் உள்ளதை மனதில் கொள்ளவும்.
Deep Talk Tamil சார்பாக எங்களது ஆடி18 நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். 18 படிகளில் பெருக்கு எடுத்து வெள்ளம் ஓடுவது போல உங்களது வாழ்விலும் எல்லாவித வளமும் நலமும் பெறுவதற்கு இறைவனை வேண்டுகிறோம்.