யார் இந்த ஜடா முனி? இவருக்கும் முனீஸ்வரருக்கும் தொடர்பு உள்ளதா..!
இன்றும் எல்லை தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கக்கூடிய முனிஸ்வரனை தொன்று தொட்டு நாம் வணங்கி வருகிறோம். இந்த தெய்வத்தின் வழிபாடு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஒரு சில இனத்தைச் சேர்ந்த மக்கள் முனீஸ்வரனையும் குல தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள்.
ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த தெய்வத்தை வழிபடக்கூடிய வழக்கு இருந்துள்ளது. அது சரி ஜடாமுனிக்கும் இந்த முனிஸ்வரருக்கும் தொடர்பு உள்ளதா? இல்லை எனில் யார் இந்த ஜடா முனி.
மிகவும் உக்கிரமான கடவுளாக சித்தரிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த ஜடா முனி சிவபெருமானின் அம்சம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தனது தலைப்பகுதியில் மிகப்பெரிய சடை முடியை கொண்டு இருப்பதால்தான் ஜடாமுனி என்று அழைக்கப்படுகிறார்.
இவரும் சிவபெருமானை போலவே உடல் முழுவதும் சாம்பலை தரித்தபடி கழுத்தில் நாகத்தை ஆபரணமாகக் கொண்டு கைகளில் பல்வேறு ஆயுதங்களை தாங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
பார்ப்பதற்கு கடுமையான தோற்றத்தில் காட்சியளிக்க கூடிய ஜடாமுனி எமனை தன் கால்களால் தாக்கக்கூடிய அளவு மட்டுமல்லாமல், எமனின் உயிரை எடுக்கக்கூடிய அளவு பலத்தோடு திகழ்கிறார்.
எல்லாவிதமான தெய்வங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட ஜடாமுனி நீருக்கு மேல் நின்ற நிலையில் தியானம் செய்யும் வல்லமை கொண்ட இந்த முனியை வழிபடும் போது எண்ணற்ற நன்மைகளை கொடுப்பார். அது மட்டும் அல்லாமல் தீய சக்திகளால் ஏற்படும் பேரழிவுகளில் இருந்து உங்களை காத்து நிற்பார்.
மாய ஜடாமுனி, ஜல ஜடாமுனி, மலை ஜடாமுனி, குகை ஜடாமுனி, வன ஜடாமுனி போன்ற பல அவதாரங்களிலும் அருள்பாலிக்கும் ஜடா முனீஸ்வரரை வணங்க நன்மைகள் நடக்கும்.
இந்த ஜடா முனி விரும்பும் பால், வேர்க்கடலை, சுருட்டு, மாமிசங்களை கொண்டு படையில் இட்டு வழங்குவதின் மூலம் இவரது அருள் நமக்கு கிடைக்கும்.
காவல் தெய்வமான முனீஸ்வரனை எப்படி வணங்குகிறோமோ அது போலவே இந்த ஜடா முனியை வணங்கக்கூடிய பழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் காணப்படுகிறது.
இதனை அடுத்து இரண்டு தெய்வங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை ஒப்பிட்டு நோக்கும் போது, இரு தெய்வங்களும் காவல் தெய்வங்களாக எல்லையை பாதுகாப்பதோடு தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகளை அதாவது பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை தகர்த்தெறிய கூடிய சக்தி படைத்த தெய்வங்களாக உள்ளது.
மேலும் ஜடா முனி, நாதமுனி, வேதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலைமுனி ஆகியோர் முனீஸ்வரன் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுவதால் முனிஸ்வரனுக்கும் ஜடா முனிக்கும் நிச்சயமாக ஒரு சம்பந்தம் உள்ளது என்று கூறலாம்.