“கல்யாணம் ஆகாமலேயே லிவ் இன் டூகதரில் வாழும் ஒரு கிராமம்..!” – அதுவும் இந்தியாவில்..
பாரம்பரிய கலாச்சார மரபுகளை கடைபிடிப்பதில் இந்தியாவுக்கு நிகராக எந்த நாட்டையும் கூற முடியாது. எனினும் அவற்றிற்கு நேர் மாறாக ஒரு ஊர் உள்ளது என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கல்யாணம் செய்து கொள்ளாமல் இளைஞர்கள் வாழும் உறவு முறையை லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்பார்கள். இது தற்சமயம் மேற்கத்திய நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் பரவி வருவதாக நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம்.
ஆனால் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக இந்த முறையை கடைபிடித்து திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா அப்படிப்பட்ட ஒரு கிராமம் இந்தியாவில் ராஜஸ்தானில் இருக்கும் கரசியா எனும் பழங்குடி மக்கள் ஆயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் லிவ் இன் ரிலேஷன்ஷிப் வாழ்ந்து வருகிறார்கள்.
இதை தங்கள் மூதாதையர்கள் இடம் என்று கற்று அதை பின்பற்றி வருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள், என்றால் மேற்கத்திய நாட்டிற்கே சவால் விடும் அளவுக்கு சமமாக இருக்கிறது 70 வயது மூதாட்டி தனது சொந்த மகன் முன்னால் தனது லிவ்விங் பார்ட்னரை திருமணம் செய்து கொள்கிறார்.
இது பெரும் ஆச்சரியத்தை நமக்கு அளிக்கிறது. அதுபோல் மணமகன் வீட்டார் திருமண செலவில் மொத்தத்தையும் அவர்களே எடுத்து செய்ய வேண்டும். இந்த கிராமத்தில் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவர் ஒருவராக வாழலாம். ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது.
அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனில் அந்த நபர் வேறு ஒரு துணையைத் தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல் மணமகன் வீட்டார் தான் மணமக்களுக்கு சீர்வரிசை கொடுக்க வேண்டும். அது திருமணம் நடந்த பிறகு இணைந்தாலும் சரி அல்லது அதற்கு முன்பே இணைந்தாலும் சரி மணமகன் வீட்டார் கொடுத்தே ஆக வேண்டும்.